அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் சீமான்; பொது வேட்பாளரா என்ற கேள்விக்கும் பதில்

Seeman
By Karthikraja Oct 29, 2026 11:38 AM GMT
Report

seeman says will contest ambasamudram by election: அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளதாக சீமான் அறிவித்துள்ளார்.

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் சீமான்

2026 தமிழ்நாடுசட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட 6 வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள், தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்தனர்.

இதில், 2 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்றது. மீதமுள்ள அம்பாசமுத்திரம் உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு விரைவில் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் தான் போட்டியிட உள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். 

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் சீமான்; பொது வேட்பாளரா என்ற கேள்விக்கும் பதில் | Seeman Says Will Contest Ambasamudram By Election

பொது வேட்பாளரா என கேட்கப்பட்ட கேள்விக்கு, அனைத்து இடைத்தேர்தல்களிலும் நாம் தமிழர் போட்டியிட்டு வருகிறது. நான் எப்போதும் பொது வேட்பாளர். அனைத்து சாதி, மதத்திற்கான பொதுவேட்பாளர் நாம் தமிழர் கட்சி. திமுக அதிமுக போட்டியிட்டாலும், போட்டியிடாவிட்டாலும் நான் போட்டியிடுவேன்.

சீமானின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்க வேண்டுமென மற்ற கட்சி தலைமைகள் விரும்புவதை விட என் மக்கள் விரும்ப வேண்டும்.

1 விழுக்காடு வாக்கு உள்ள கட்சிகளே கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு சட்டமன்றம் செல்லும் போது, 8 விழுக்காடு வாக்கு வைத்திருந்த என்னிடம் எவ்வளவு பேரம் நடந்திருக்கும் என உங்களுக்கு தெரியும். அப்படி கூட்டணிக்கு சென்றால் அரசின் தவறை இதே போல் சுட்டிக்காட்ட முடியாது" என தெரிவித்துள்ளார்.