திருமாவளவனை எப்படியாவது முதல்வராக்குவோம் - சீமான்
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை கண்டு திமுக பயப்படும் என சீமான் பேசியுள்ளார்.
சீமான்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நாமக்கல் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், "திருமாவளவன் முதலமைச்சராக வருவதை வரவேற்கிறேன். அவருக்கு அதற்கான தகுதி உள்ளது. ஒரு தமிழராக, தம்பியாக என்னை விட அவர் முதலமைச்சர் ஆகுவதை எண்ணிப் பெருமையடைவதற்கு யாரும் இல்லை.
திருமாவளவன்
திருமாவளவன் முதலமைச்சராக வரகூடாது என கூறுவதற்கு எல்.முருகன் யார்? எல் முருகன் மட்டும் இரண்டு முறை மத்திய அமைச்சர் ஆகலாமா? தமிழர் நிலத்தில் தமிழர் திருமாவளவன் முதல்வர் ஆக கூடாதா? உள் இடஒதுக்கீடுக்கு எதிராக வழக்கு போட்டால், முதல்வராக்க விடமாட்டீங்களா ?
உள் இடஒதுக்கீட்டை எதிர்க்கின்றோம். இட ஒதுக்கீட்டை வரவேற்கின்றோம். இதற்காக நீங்கள் திருமாவளவனை முதல்வராக வர விடாமல் தடுத்தால் எப்படியாவது திருமாவளவனை முதல்வராக்குவோம்.
தமிழ்த்தாய் வாழ்த்து
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை கண்டு திமுக பயப்படும். நல்ல ஆட்சி கொடுத்திருந்தால் எதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தனித்து நிற்க தி.மு.க.,வுக்கு தைரியமில்லை. இவ்வளவு நாள் என்னை பார்த்து பயந்தவர்கள் இனி என் தம்பியை பார்த்தும் பயப்படுவார்கள்.
தமிழகத்தில் திராவிட நாடு எதற்கு வேண்டி இருக்கிறது. அதன் எல்லை எது? திராவிட நாடு இலக்கியத்தில் , வரலாற்றில் எங்கு உள்ளது. தமிழனை வசதியாக ஆள்வதற்கு திராவிட நாடு என சொல்கின்றனர். நான் 2016 முதல் தமிழ்த்தாய் வாழ்த்தை மாற்றுவேன் என பேசி வருகிறேன். நான் ஆட்சிக்கு வந்ததும் பாரதிதாசன் அல்லது பெருஞ்சித்திரனார் எழுதிய பாடலை வைப்பேன்" என பேசியுள்ளார்.