தோல்வியடைந்த மெட்ரோ திட்டம் தேவையில்லை - சீமான் சொல்வது என்ன?
தோல்வியடைந்த மெட்ரோ திட்டம் தேவையில்லை என சீமான் தெரிவித்துள்ளார்.
மெட்ரோ திட்டம்
சென்னையில், கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் மெட்ரோ ரயில் போக்குவரத்து பயன்பாட்டில் உள்ளது.
சுமார் 40 சென்னை மெட்ரோ நிலையங்கள் பயன்பாட்டில் உள்ளன. மேலும், பல்வேறு பகுதிகளுக்கு மெட்ரோ திட்டத்தை விரிவாக்கம் செய்வதற்கு பணிகள் நடைபெற்று வருகிறது.
தினமும் லட்சக்கணக்கான மக்கள் மெட்ரோ ரயில் மூலம் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையை தொடர்ந்து தமிழ்நாட்டில் மதுரை மற்றும் கோயம்புத்தூரில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வருவதற்கான ஒப்புதல் கோரி திட்ட அறிக்கையை மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பியது.
குறைத்த மக்கள் உள்ள காரணத்தால் இந்த திட்டத்தை மத்திய அரசு நிராகரித்ததாக தகவல் வெளியானது.
ஆனால், திட்டம் நிராகரிக்கப்படவில்லை எனவும் கூடுதல் தகவல்கள் கேட்டு மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளதாகவும் சென்னை மெட்ரோ நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
சீமான் கருத்து
இன்றைய செய்தியாளர் சந்திப்பில், இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், "மெட்ரோ ரயில் திட்டம் என்பது பல மாநிலங்களில் தோல்வியடைந்த திட்டம். அது வேண்டாத வேலை. நிறைவேற்றப்பட வேண்டிய பல திட்டங்கள் உள்ள போது, இதற்கு ரூ.71,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உலக வங்கி அதை வழங்குகிறது. இதனை பயன்படுத்தும் பயனாளிகள் எத்தனை பேர்? அனைவரிடமும் மகிழுந்து உள்ளது.
சென்னையில் பணிகள் தொடங்கினால், வெகுகாலமாக பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் கடும் போக்குவரத்து ஏற்பட்டு அவசர ஊர்தி கூட செல்ல முடியாத நிலை உள்ளது" என தெரிவித்துள்ளார்.