என்னிடம் ஆயிரக்கணக்கான கோடி பேரம் பேசினார்கள் - சீமான்

Seeman
By Karthikraja Nov 26, 2026 03:44 PM GMT
Report

seeman says they offer 1000 crores for alliance: கூட்டணிக்காக என்னிடம் ஆயிரக்கணக்கான கோடி பேரம் பேசினார்கள் என சீமான் பேசியுள்ளார்.

தமிழர்களுக்கு தாய்மொழி இல்லாத நிலை

திருநெல்வேலியில் நடைபெற்ற 'தலைவர் பிறந்த நாள் தமிழர் எழுச்சி நாள்' விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உரையாற்றினார். 

என்னிடம் ஆயிரக்கணக்கான கோடி பேரம் பேசினார்கள் - சீமான் | Seeman Says They Offer 1000 Crores For Alliance

இதில் பேசிய அவர், "உலகில் தலைசிறந்த ஒருவரை நாம் தலைவராகப் பெற்றிருக்கிறோம். தோல்வியிலும் நாம் திமிரோடு இருக்கிறோம். தமிழ் எழுதவும், படிக்கவும், பேசவும் தெரியாத பல தலைமுறைகள் தற்போது உருவாகி வருவதை ஒப்புக்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. தமிழர்களுக்கு தாய்மொழி இல்லாத நிலை உருவாகி வருகிறது. நாட்டை ஆள்பவர்களுக்கே தமிழ் பேசத் தெரியாத நிலை இருக்கிறது.

மொழியின் மீதான பற்றும், இனப்பற்றும் குறைந்து வருகிறதா என்ற கேள்வி எழுகிறது. தமிழுடன் சமஸ்கிருதம் கலந்து கன்னட மொழி உருவானதைப்போல, தற்போது தமிழுடன் ஆங்கிலம் கலந்து பேசும் நிலை அதிகரித்து வருகிறது.

சீமான் தோற்றுப்போனாரா, ஆம், உண்மைதான். கேவலமான, கேடுகெட்ட பணம் கொடுக்கும் தேர்தலில்தான் நான் தோற்றுப்போனேன். தேர்தலில் நான் தோற்றது மக்களின் தவறு. நான் பேசும் கருத்துகள் மக்களிடம் உரிய அளவில் சென்றடையவில்லை.

அந்த நிலையை மாற்ற முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இன்று வெல்லவில்லை. அவ்வளவுதான். நாளை வெல்லப்போகிறேன். எனக்குள் பல்லாயிரக்கணக்கான முன்னவர்கள் இருக்கிறார்கள்.

ஆயிரக்கணக்கான கோடி பேரம்

அம்பாசமுத்திரத்தில் பணமும் அதிகாரமும் வேலை செய்யும். என்னை சட்டமன்றத்திற்கு எப்படியாவது வர விடக்கூடாது என தடுக்க நினைப்பார்கள். தெருத்தெருவாக நடந்து மக்கள் மனதை வென்று சட்டமன்றம் செல்வோம். நான் அம்பை தொகுதியை வென்றால், அது சிறந்த தொகுதியாக மாறும். நான் மாநிலத்தை வென்றால் சிறந்த மாநிலமாக மாற்றுவேன். எல்லாம் மாறும். 

என்னிடம் ஆயிரக்கணக்கான கோடி பேரம் பேசினார்கள் - சீமான் | Seeman Says They Offer 1000 Crores For Alliance

நான் பொது வேட்பாளராக நிறுத்தப்படுகிறேன் என்று சொல்கிறார்கள். திமுக தலைமையோ, அதிமுக தலைமையோ இதை சொன்னதா? நாங்கள் சொன்னோமா பொது வேட்பாளராக நிற்க போகிறோம் என்று? எத்தனை தொகுதிகளில் இடைத்தேர்தல் வரப் போகிறது? ஏன் அம்பாசமுத்திரத்தில் மட்டும் அலறுகிறார்கள்? ஏனென்றால் நான் அங்கு நிற்கிறேன்.

நான் முதல்வராக இருந்திருந்தால் திருப்பரங்குன்றம் பிரச்சினையை அரை மணி நேரத்தில் தீர்த்து வைத்திருப்பேன். என்னை பதவி வெறி பிடித்தவன் என சொல்கிறார்கள். பதவி வெறி இருந்தால், என்றோ யாருடனோ கூட்டணி வைத்து இன்று அமைச்சராகி இருப்பேன்.

என்னிடம் ஆயிரக்கணக்கான கோடி பேரம் பேசினார்கள். 2024ஆம் தேர்தலில் 34 லட்சம் வாக்குகள் வாக்கு இருக்கும் போதே அவ்வளவு பேரம் பேசினார்கள். பேசினவர்கள் எல்லாம் கூட்டணி வை என்றார்கள், இப்போது என்னை திட்டி பேசிக் கொண்டிருக்கிறான்.

எல்லோரும் வீட்டில் பேசினார்கள். என்னை சரி செய்ய முடியாது என்று என் மனைவியிடம் பேசினார்கள். அவர் என்னை விட பிடிவாதக்காரர். எத்தனை முறை தோற்றாலும் சரி கூட்டணி என்ற பேச்சுக்கு இடமில்லை என்று சொன்னார்.

எத்தனை முறை என்னை தோற்கடித்தாலும் நான் தோற்கவில்லை, நீ தான். என்னுடைய வெற்றியை தள்ளிப்போடலாம், ஆனால் தடுத்து விட முடியாது" என தெரிவித்துள்ளார்.