சங்கி என்றால் நண்பன்.. திராவிடன் என்றால் திருடன் - சீமான் சூசகம்!
சங்கி என்றால் நண்பன்.. திராவிடன் என்றால் திருடன் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
சீமான்
தமிழகத்தை பொறுத்தவரையில் வேகமாக வளர்ந்து வரும் ஒரு கட்சி என்றால் அது, நாம் தமிழர் கட்சி தான். தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அக்கட்சியின் முக்கிய - ஒரே ஈர்ப்பு சக்தியாக திகழ்கிறார். இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவரிடம் பல விமர்சனம் தொடர்பான கேள்விகள் கேட்க்கப்பட்டது. சங்கி தொடர்பான விமர்சனத்திற்கு பதிலளித்த அவர், என்னைத் தனிப்பட்ட முறையில் சங்கி எனக் கூறியதற்கு ‘தான் செருப்பைக் கழட்டி அடிப்பேன்’ எனக் கூறினேன்.
சங்கி
சங்கி என்றால் நண்பன் எனப் புராண காலங்களிலேயே விரிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாணயம் வெளியிடுவதற்கு மத்திய அரசின் அமைச்சர்களை அழைத்து வருகிறீர்கள், சென்னையில் இருந்து டெல்லி சென்று மத்திய அரசின் தலைவர்களைப் பார்த்து சந்தித்துப் பேசுகிறீர்கள்,
அப்படி என்றால் திமுகவைச் சார்ந்தவர்கள் எல்லாம் சங்கி இல்லையா?” எனவும் கேள்வி எழுப்பினார். மேலும், சங்கி என்றால் நண்பன் என்று பொருள்படுகிறது. திராவிடன் என்றால் திருடன் என்று பொருள்படுகிறது. நீங்கள் தமிழ் மக்களை,
தமிழ் இனத்தை மறைத்து திராவிடன் திராவிடன் எனக் கூறி வருகிறீர்கள். ‘எனது தந்தையை சங்கி எனக் கூறுவது வருத்தமளிக்கிறது’ எனத் தெரிவித்தார் ரஜினியின் மகள். அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நான் ஏற்கனவே ஆதரவாகப் பேசினேன்.” என்று தெரிவித்தார்.