தமிழின் பெருமையை உலக அரங்கில் பரப்பும் மோடி - அண்ணாமலை முன்பு புகழ்ந்த சீமான்
தமிழ்நாட்டில் பாஜக இருப்பதை தனது செயல் மூலம் காட்டியவர் அண்ணாமலை என சீமான் பேசியுள்ளார்.
சீமான்
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைகழகத்தின் தமிழ்ப் பேராயம் சார்பில் சொல் தமிழா சொல் என்ற பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டிக்கான பரிசளிப்பு விழா இன்று நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பேசிய சீமான், "தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா என ஒரு கட்சி இருக்கிறது அந்த கட்சி தமிழ்நாட்டில் வளர்கிறது என தனது செயல்பாடுகள் மூலம் காட்டியவர் அன்பு இளவல் அண்ணாமலை.
நான் தமிழிலிருந்து தேசியத்தை பார்ப்பதாகவும், அவர் தேசியத்திலிருந்து தமிழைப் பார்ப்பதாக அண்ணாமலை கூறினார். அவருக்கு நான் ஒன்றைக் கூறிக்கொள்கிறேன். நான் என் அம்மாவுக்கு முதலில் மகனாக இருக்கிறேன். பின்பு என் அத்தைக்கு மருமகனாக இருக்கிறேன்.
இந்தியா பிரதமர் மோடி வெளி நாடுகளுக்கு பயணம் செல்லும் போது, 'உலகின் முதல்மொழி தமிழ் எங்கள் இந்தியாவில் இருப்பது பெருமை.
மொழிகளுக்கு தாய் தமிழ்
இந்திய மொழியின் தொன்மையை தமிழில் இருந்து அறியலாம். பல்வேறு நாடுகளில் உள்ள மக்கள் பேரார்வத்துடன் தமிழை கற்று வருகின்றனர்' என பேசி வருகிறார்.
உலகில் அனைவரும் அவரவர் தாய் மொழியில் பேசுகிறார்கள். தமிழர்கள் அந்த மொழிகளின் தாய் மொழியில் பேசுகிறோம்.
இயேசு பிறந்து 500 ஆண்டுகளுக்கு பின்னர் உருவான மொழி ஆங்கிலம். இயேசு பிறப்பதற்கு 500 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழின் தொண்மையான இலக்கன நூல் தொல்காப்பியம் இருந்தது" என கூறினார்.

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
