பாஜக 3வது இடத்திற்கு வந்துட்டா கட்சியை கலைக்கிறேன்; அவன்தான் வீரன் - சவால் விட்ட சீமான்!
பாஜக 3வது இடத்திற்கு வந்தால் கட்சியை கலைப்பதாக சீமான் சவால் விடுத்துள்ளார்.
பாஜக 3வது இடம்
தமிழகத்தில் முதல் கட்டமாகவே 39 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக தெற்கில் வளர்ந்து வருகிறது.
குறிப்பாக தமிழ்நாட்டில் பாஜக 3 வது பெரிய கட்சியாக உருவாகும் எனக் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து, இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சீமான், ஜூன் 4 க்கு பிறகு தனியாக நின்று பாஜக பெற்ற வாக்குகள் எவ்வளவு? என்னை தாண்டி இருந்தது என்றால் நான் கட்சியை கலைத்துவிட்டு சென்றுவிடுகிறேன்.
சீமான் சவால்
தனித்து போட்டியிட வேண்டும். யார் 3வது கட்சி, பெரிய கட்சி என்று தெரிந்துவிடும். கூட்டணி வைத்து போட்டியிட கூடாது. ஒத்தைக்கு ஒத்தையாக தனித்து போட்டியிடனும். சிங்கம் மாறி நிற்க வேண்டும். தனித்து சண்டை போட வேண்டும். அவன் தான் வீரன். அவன் தான் ஆண்மகன்.
எங்க வள்ளுவனுக்கும் இந்தியனுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு. எங்க தாத்தா காலத்தில் இந்து என்ற மதம் இருந்ததா? அதிகாரத்தில் இருக்கிறதால் இப்படி எல்லாம் சேட்டை செய்றாங்க. முல்லை பெரியாறு அணை உறுதித்தன்மையோடு இருக்கிறது என்று ஆய்வு முடிவுகள் சொன்ன பிறகு அணை கட்ட கூடாது.
அணை பலவீனமாக இருக்கிறது என்றால், அதை இடிக்காமல் அணைக்கு உள்ளேயே ஒரு அணையை கட்ட வேண்டியது தானே. முல்லை பெரியாறு அணையை ஏன் இடிக்க வேண்டும். அதை ஏன் இடித்துவிட்டு கட்ட வேண்டும். அதை இடிக்காமலேயே உள்ளே ஒரு அணையை கட்டலாமே? எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.