சொந்தமா விமானம் இல்லை; 54 ஏர்போர்ட் தனியாருக்கு தாரைவார்க்கவா - சீமான் கொந்தளிப்பு
மத்திய அரசின் பட்ஜெட் தாக்குதல் குறித்து சீமான் விமர்சித்துள்ளார்.
பட்ஜெட் தாக்குதல்
2023-24 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நேற்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்நிலையில் மத்திய பட்ஜெட் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"பாஜக அரசின் 2023ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் நாட்டின் வளர்ச்சியை முன்னிறுத்தும் எவ்வித திட்டங்களும் இல்லாதது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. கடந்த 9 ஆண்டுகால மோடி ஆட்சியில் வெளியிடப்பட்ட நிதிநிலை அறிக்கைகளைப்போலவே இந்த நிதிநிலை அறிக்கையும் மக்களை ஏமாற்றும் அறிக்கையாகவே உள்ளது.
சீமான் ஆவேசம்
இந்திய நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள நடப்பு ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் தனி நபர்களுக்கான வருமான வரி வரம்பை உயர்த்தியது வரவேற்கக் கூடியது என்றாலும், புதிய வரி முறைக்கு மட்டுமே அது பொருந்தும் என்று அறிவித்திருப்பது, நடுத்தர மக்களை வஞ்சிக்கும் செயலேயாகும்.
ஏற்கனவே உச்சத்தில் இருக்கும் தங்கத்தின் விலையை மேலும் பன்மடங்கு அதிகரிக்கச் செய்யும் என்பதால், இனி தங்கம் வாங்குவது ஏழை மக்களுக்கு பகற்கனவாகவே மாறிவிடும். அத்தோடு, கள்ளச்சந்தையில் பெருமளவில் தங்க கடத்தலுக்கும் வழிவகுக்கும்.
இந்திய ஒன்றிய அரசுக்கு, சொந்தமாக ஒரே ஒரு விமானம் கூட இல்லாத நிலையில் புதிதாக 54 விமான நிலையங்கள் கட்டப்படும் என்ற அறிவிப்பு வேடிக்கையானதாகும். புதிய விமான நிலையம் கட்டி, அதனை தனியாருக்கு தாரை வார்ப்பதற்கு,
எதற்காக அரசே விமான நிலையங்களை கட்ட வேண்டும்? அதனையும் தனியார் நிறுவனங்களிடமே ஒப்படைக்கலாமே?
நாட்டின் முன்னற்றத்திற்கு துளியும் உதவாத வெற்று அறிக்கையேயாகும்" என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.