காங்கிரசை வெளியேற்றினால் திமுகவிற்கு ஆதரவு.. 40 தொகுதிகளில் விலகிக்கொள்வேன் - சீமான் பேட்டி!

Indian National Congress Tamil nadu DMK Seeman
By Vinothini Aug 29, 2023 05:23 AM GMT
Report

நாம் தமிழர் கட்சி சீமான் திமுகவுடன் கூட்டணி குறித்து பேசியுள்ளார்.

நிகழ்ச்சி

கரூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வருகை தந்த சீமான், முதலில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், "பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தி.மு.க. அமைச்சர்களின் சொத்து பட்டியலை வெளியிடுகிறார். நேர்மையாளர் என்றால் அனைத்தையும் பேச வேண்டும். கோடநாடு வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்த வேண்டும் என்ற கருத்தை வரவேற்கிறேன்.

seeman-says-about-dmk-and-congress

தேர்தல் பிரசாரத்தின்போது 2 மாதத்தில் கோடநாடு கொலை வழக்கில் விசாரணை செய்து நீதியை கொண்டு வருவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். ஆனால் தற்போது 2½ ஆண்டுகள் ஆகியுள்ளது. இதேபோல் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்து 6 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை".

சீமான் பேட்டி

இதனை தொடர்ந்து, அவர் பேசுகையில், "தமிழகத்திற்கு உரிய நதிநீரை பங்கீடு செய்யாவிட்டால் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு தொகுதி பங்கீடு இல்லை என முதலமைச்சர் கூறுவாரா? ஆனால் ஜெயலலிதாவாக இருந்தால் கர்நாடகாவில் தண்ணீர் தரவில்லையென்றால் காங்கிரசுடன் கூட்டணி வைக்கமாட்டார். கூட்டணியில் இருந்து காங்கிரசை வெளியேற்றினால் தி.மு.க.விற்கு ஆதரவு அளிக்க தயாராக உள்ளேன்.

seeman-says-about-dmk-and-congress

முஸ்லிம் சிறை கைதிகளை விடுதலை செய்யுங்கள். உங்களுக்கு ஆதரவு அளிக்கிறேன். 40 தொகுதிகளிலும் நான் விலகிக் கொள்கிறேன். அமைச்சர் செந்தில்பாலாஜி சிறையில் இருப்பதில் எனக்கு தனிப்பட்ட முறையில் வருத்தம் இருக்கிறது.

அ.தி.மு.க. அமைச்சர்கள் 6 பேர் மீது சி.பி.ஐ. ஊழல் வழக்கு உள்ளது. ஏன் அவர்கள் மீது நடவடிக்கை இல்லை. ஏனென்றால் அவர்கள் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ளார்கள்" என்று கூறியுள்ளார்.