அவரு ரொம்ப நல்லவரு,எது பண்ணாலும் சரியா தான் பண்ணுவாரு - கண்கலங்க பேசிய சீமானின் மனைவி!
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் மனைவி கயல்விழி மேடையில் கண்கலங்க பேசியுள்ளார்.
விஜயலட்சுமி புகார்
திரைப்பட நடிகை விஜயலட்சுமி கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் அளித்தார். அதில் "மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சீமான் என்னைத் திருமணம் செய்துகொண்டார்.
நாங்கள் கணவன், மனைவியாக வாழ்ந்தோம். நான் 7 முறை கர்ப்பமானேன். ஆனால்,என்னுடைய அனுமதியின்றி, மாத்திரை மூலம் கருக்கலைப்பு செய்தார் போன்ற குற்றச்சாட்டுகளுடன் புகார் அளித்தார். இது தொடர்பாக வளசரவாக்கம் போலீசார் சீமான் நேரில் ஆஜராகுமாறு 2 முறை சம்மன் அனுப்பினர். இதற்கிடையில் சில நாட்களுக்கு முன்னர் நடிகை விஜயலட்சுமி சீமான் மீது அளிக்கப்பட்ட புகாரை எழுத்துப்பூர்வமாக நள்ளிரவில் வாபஸ் பெற்றார்.
முன்னதாக விஜயலட்சுமியின் புகார் தொடர்பாக வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பியிருந்த நிலையில், விசாரணைக்காக மனைவியுடன், சீமான் ஆஜரானார். அவருடன் வழக்கறிஞர் ரூபன் சங்கர் உள்ளிட்ட 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து ஒன்றரை மணி நேரமாக சீமானிடம் விசாரணை நடைபெற்றது. இந்த விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இன்னும் இதுகுறித்த சச்சரவு ஓய்ந்தபாடில்லை.
சீமானின் மனைவி பேச்சு
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் மூத்த தலைவர் தடா நா. சந்திரசேகரனின் நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் சீமானின் மனைவி கயல்விழி முதன்முறையாக மேடையேறி கண்கலங்க பேசியுள்ளார். அவர் பேசியதாவது "என்ன பேசுறதுனு தெரியல..மேடையில் பேசி இதுவரை பழக்கமில்ல.
ஆனா மூத்தவரை (நா. சந்திரசேகரன்) பத்தி எப்படி பேசாம இருக்குறது? சீமானுக்காக என்னை பொண்ணு பார்த்தவரே மாமா தான். எனக்கும் சீமானுக்கும் திருமணம் நடக்கணும்னு ரொம்ப உறுதியா இருந்தவரு அவரு. ஆரம்பக்காலத்தில் எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல சின்ன சின்ன பிரச்சினை வரும். அப்போ அவரு என்கிட்ட சொல்ற ஒரே வார்த்தை, "தம்பி (சீமான்) ரொம்ப நல்லவன்மா..
அவன் எது பண்ணாலும் சரியா தான்மா இருக்கும்" என்று தான் சொல்லுவார். இப்போ கூட ஏதாவது பிரச்சினை வந்தால், எனக்கு நானே சொல்றதும் அதே வார்த்தை தான். "அவரு ரொம்ப நல்லவரு.. எது பண்ணாலும் சரியா தான் பண்ணுவாருனு" எனக்கு நானே சொல்லிப்பேன். மாமா உங்கள ரொம்ப தவற விடுறோம். தனிப்பட்ட முறையில் நான் தவற விடுறேன் நன்றி என கூறினார். மனைவியின் உணர்ச்சிவசப்பட்ட பேச்சை கேட்டு கண் கலங்கியவாறு அமர்ந்திருந்தார் சீமான்.