நாம் தமிழரை கட்சியாகவே மதிக்கலையா? அன்புமணிக்கு சீமான் பதிலடி

seeman anbumaniramadoss நாம் தமிழர் கட்சி
By Petchi Avudaiappan Dec 30, 2021 06:53 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

நாம் தமிழரை கட்சியாகவே மதிக்கவில்லையா என அன்புமணிக்கு சீமான் கேள்வியெழுப்பியுள்ளார். 

பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீட்டை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததற்கு சமூக நீதி பேசும் எந்த கட்சியும் கண்டனம் தெரிவிக்கவில்லை எனவும், தமிழகத்தில் பாமக மட்டுமே சமூக நீதி கட்சி எனவும் பாமக கூட்டத்தில் அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.

நாம் தமிழரை கட்சியாகவே மதிக்கலையா? அன்புமணிக்கு சீமான் பதிலடி | Seeman Responds To Anbumani Ramadoss

இந்நிலையில் சென்னையில் நேற்று நடைபெற்ற  நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை நான் கண்டித்தேன். என்னை நீங்கள் கணக்கிலேயே சேர்ப்பதில்லையா? நான் தான் மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கிறேன். என்னை நீங்கள் கட்சியாகவே கருதவில்லை போல என கேள்வியெழுப்பினார். 

மேலும் அன்புமணி பொத்தாம் பொதுவாக பேசுகிறார். அந்த நேரத்தில் நான் பேட்டியாகவும் கொடுத்தேன், கண்டித்து அறிக்கையும் வெளியிட்டேன். தமிழகத்தில் மூன்றாவது மிகப்பெரிய கட்சியாக நாம் தமிழர்தான் இருக்கிறது எனவும் சீமான் கூறியுள்ளார்.,