நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் காளியம்மாள்? சீமான் சொன்னது என்ன?

Naam tamilar kachchi Seeman
By Karthikraja Feb 22, 2025 08:45 AM GMT
Report

 நாதகவில் இருந்து காளியம்மாள் விலகுவதாக வந்து செய்திக்கு சீமான் பதிலளித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி

2016 சட்டமன்ற தேர்தல் முதல் 2024 நாடாளுமன்ற தேர்தல் வரை எந்த தேர்தலிலும் கூட்டணி அமைக்காமல் தனித்தே தேர்தலில் களம் கண்டு வரும் நாம் தமிழர் கட்சி ஒவ்வொரு தேர்தலில் அதன் வாக்கு வங்கியை அதிகரித்து வருகிறது. 

seeman சீமான்

குறிப்பாக பெண்களுக்கு சம உரிமை வழங்கும் வகையில், அனைத்து தேர்தல்களிலும் 50% பெண் வேட்பாளர்களை நிறுத்தி பிற கட்சிகளுக்கு முன் மாதிரியாக இருந்தது.

நிர்வாகிகள் விலகல்

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 8% வாக்குகள் பெற்று மாநில கட்சியாக தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் பெற்றது. 2026 சட்டமன்ற தேர்தலிலும் தனித்து போட்டியிடும் முடிவிலே உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சமீபகாலமாக நாம் தமிழர் கட்சியில் இருந்து அதன் நிர்வாகிகள் அடுத்தடுத்து கட்சியை விட்டு வெளியேறும் நிகழ்வு அரங்கேறி வருகிறது.  

காளியம்மாள் சீமான்

சமீபத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த ஜெகதீச பாண்டியன், சீமான் வலது சாரிகளின் வழிகாட்டுதலில் அரசியல் செய்கிறார் என்பது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கட்சியை விட்டு வெளியேறினார். 

அதே போல் கட்சியை விட்டு வெளியேறிய நிர்வாகிகள் பலரும், சீமான் சர்வாதிகாரியாக செயல்படுகிறார், எங்கள் கருத்துக்களை கேட்பதில்லை, மரியாதையை தருவதில்லை, கட்டமைப்பை உருவாக்குவது இல்லை, கட்சிக்கு உழைப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்குவது இல்லை போன்ற குற்றச்சாட்டுகளை வைத்து வெளியேறி வருகின்றனர்.

காளியம்மாள் விலகல் 

இது குறித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேள்வி எழுப்பிய போது, ஜனநாயகமாக சிந்தித்து சர்வாதிகாராமாக செயல்பட வேண்டும். ஒரு நேர்மையாளர், சர்வாதிகாரியாகத்தான் இருக்க முடியும் என விளக்கமளித்தார். 

காளியம்மாள் நாம் தமிழர்

இந்நிலையில் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ள காளியம்மாள் கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாகவும், விரைவில் கட்சியில் இருந்து விலக உள்ளதாகவும் தகவல் வெளியானது. 

சமீபத்தில் விசிக முன்னாள் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, அதிமுக ஐடி விங் முன்னாள் இணை செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் ஆகியோர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்தனர். அப்போது காளியம்மாவும் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

சீமான் விளக்கம்

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் மணப்பாட்டில் உறவுகள் சங்கமம் என்ற நிகழ்ச்சி அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக காளியம்மாள் கலந்து கொள்ள உள்ளார். இந்த நிகழ்வில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உட்பட திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்கும் நிகழ்வில் காளியம்மாளும் மேடை ஏறுகிறார். 

காளியம்மாள் விலகல்

மற்ற கட்சி நிர்வாகிகளின் பெயர்கள் கட்சி பெயர், பொறுப்போடு அச்சிடப்பட்டிருக்கும் நிலையில் காளியம்மாள் பெயர் மட்டும் சமூக செயற்பாட்டாளர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து காளியம்மாளிடம் கேட்ட போது, விரைவில் இது குறித்து பதிலளிப்பேன் என தெரிவித்துள்ளார். 

seeman about kaliammal

இந்நிலையில் காளியம்மாளின் இந்த முடிவு குறித்து சீமானிடம் கேள்வி எழுப்பிய போது, "கட்சியில் இருந்து இயங்குவதற்கும், விலகி வெளியே செல்வதற்கும் அனைவருக்கும் முழு சுதந்திரம் உள்ளது. தங்கச்சி முதலில் சமூக செயற்பாட்டாளராகதான் இருந்தார் நாங்கள்தான் கட்சியில் இணைத்தோம். இலையுதிர் காலம் போல் இது எங்கள்கட்சிக்கு காலையுதிர் காலம்" என கூறினார்.