எனக்கு முன்னாடி 4 பேர்; இந்த வேலைக்கு பேர் என்ன? - நடிகை விஜயலட்சுமிக்கு சீமான் பதிலடி
சீமான் விஜயலட்சுமி வழக்கு
நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த பாலியல் வழக்கை ரத்து செய்ய கோரி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது. 12 மாதங்களில் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டார். +
விஜயலட்சுமி கண்ணீர் வீடியோ
இதனையடுத்து காவல்துறை சம்மன் அனுப்பிய நிலையில், வளசரவாக்கம் காவல்நிலையத்தில் நேரில் ஆஜராகி சீமான் விளக்கமளித்தார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான், "என்னை பாலியல் குற்றவாளி என நீங்கள் எப்படிக் கூறுகிறீர்கள்? குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதா? விசாரணை நடைபெற்று வரும்போது குற்றவாளி என எப்படி முடிவு செய்வீர்கள்.
அவள் ஒரு பாலியல் தொழிலாளி. ஆதாரம் நான் காட்டவா? அவளுக்கு மட்டுமே மனசு இருக்கா? அவ தான் பெண்ணா? என பேசினார். இதற்கு பதிலடியாக வீடியோ ஒன்றை வெளியிட்ட நடிகை விஜயலட்சுமி, நான் என்ன பாலியல் தொழிலாளியா? நீ நாசமா போவ. என் கண்ணீர் உன்னை சும்மா விடாது என கண்ணீர் மல்க பேசினார்.
இதனையடுத்து பேசிய சீமான், எனக்கு முன்னாடி நான்கைந்து பேரை இதே மாதிரி செய்து வந்தா அந்த வேலைக்கு பேரு என்ன சொல்விங்க? ஒருவரிடம் பழகுவது.. பின்னர் வெளியே போய் வம்படியாக வழக்கு கொடுப்பது, மிரட்டி பணம் கேட்பது.
மாதம் ரூ.30,000
அவ என்னிடம் வைத்த அதிகபட்ச கோரிக்கை என்ன? என் அண்ணனிடம் அவர் இறந்துவிட்டார். மாதம் ரூ.30,000 கொடுத்து என்னை மெயின்டெயின் செய்ய சொல்லுங்க என்பதுதான். வைப்பாட்டியாக வைத்துக்க சொன்னார்.
அப்போது எங்கப்பா பாரதிராஜா, "மகனே என்னதான் அவளுக்கு வேணும் என கேட்டார். ஒண்ணுமில்ல, ரூ.30,000 கொடுத்து என்னை வைத்துக் கொள் என்கிறாள். நான் வைத்துக் கொள்ளவா? உன் மருமகள் என்னை சோற்றில் விஷத்தைப் போட்டுக் கொல்வா.. பரவாயில்லையா? என்றேன். உடனே, அப்படியாடா சொல்றா? என கேட்டார்.
இதை அவ சொன்னாளா இல்லையானு கேளுங்க..நானும் கண்ணியம் காத்து 15 ஆண்டுகள் வாயை மூடினேன். இனி எல்லாம் முடிவுக்கு வந்துருச்சு இல்லையா, அவ என்னைக்கு மரியாதை கொடுத்தா?
ஆங்கிலத்தில் ப்ளாக் மெயில் என்போம் இல்லையா, இடை மறித்து பணம் பறிக்கிறவருக்கு பெயர் என்ன சொல்லுவீங்க? என்னை எல்லோரும் சேர்ந்து பாலியல் குற்றவாளி என சொல்வதற்கு காரணம், ஒரு பாலியல் தொழிலாளிக்காக.. அதை எப்படி ஏற்பது? எல்லோரும் கொஞ்சம் கவனமாக பேச வேண்டும்" என பேசினார்.

The Crazy Truth: சிங்கத்துக்கே சவால் விடும் ஹனி பேட்ஜர்... சிக்கினால் 2 நிமிடத்தில் உயிர் இழப்பு உறுதி! Manithan

எந்த விடயத்திலும் perfection பார்க்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
