இப்படி அவசரப்பட்டு வேலையை விட்டுட்டீங்களே : அண்ணாமலையினை சீமான் கிண்டல்

BJP K. Annamalai Seeman
By Irumporai Oct 15, 2022 03:58 AM GMT
Report

மதுரை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவசரப்பட்டுவிட்டு ஐபிஎஸ் வேலையை விட்டு வந்துவிட்டதாக நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் கட்சி சீமான் விமர்சித்துள்ளார்.

சீமான்

குடிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் மதுரை பழங்காநத்தம் பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கனமழைக்கு நடுவே நடைபெற்ற இந்த கூட்டத்தில், மழையையும் பொருட்படுத்தாமல் கட்சியினரோடு மழையில் நனைந்தபடி சீமான் அமர்ந்திருந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சீமான் வந்தவரை எல்லாம் வாழ வைத்தவர்கள் தமிழர்கள் என்ற வார்த்தையில் தமிழர்கள் விழுந்துவிட்டனர். அதில் இருந்து இன்னும் எழாமல் இருப்பதால் தான் அனைத்து மாநிலத்தினரும் தமிழகத்தை ஆக்கிரமிக்க தொடங்கிவிட்டனர்.

பூமியை காக்க அரசியல்

வடமாநிலத்தவர்கள் தமிழகத்திற்கு படை எடுத்து வந்து கொண்டிருக்கிறார்கள். மற்றவர்களை போல் சாமியை காக்க அரசியல் செய்யவில்லை. பூமியை காக்க அரசியல் செய்கிறோம் என்று தெரிவித்தார். 

இப்படி அவசரப்பட்டு வேலையை விட்டுட்டீங்களே : அண்ணாமலையினை சீமான் கிண்டல் | Seeman Replied Back To Bjp Stat

தொடர்ந்து சீமானிடம் என்ன கேள்வி கேட்டாலும் பதில் கூறுகிறார், அவர் என்ன ஞானியா என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேட்கிறார்.

அண்ணாமலை கிண்டல்

அறிவது அறிவு. உணர்வது ஞானம். நான் அனைத்தையும் உணர்வேன். என்னிடம் அனைத்திற்கும் பதில் இருக்கிறது. அதனால் கேள்வி கேட்பவர்களுக்கு பதில் அளிக்கிறேன். அண்ணாமலையிடம் பதில் இல்லை. அதனால் அவர் அமைதியாக இருக்கிறார்என கூறினர்.

இரண்டு ஆண்டுகளில் அண்ணாமலையை பாஜகவினர் விரட்டிவிடுவார்கள். ஏற்கனவே இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் இப்போது என்ன ஆனார் என்றே தெரியவில்லை. அண்ணாமலையிடம் தயவுசெய்து கேட்கிறேன், எச்.ராஜாவிற்கு ஏதாவது ஒரு மாநிலத்தில் ஆளுநர் பதவி வாங்கிக் கொடுத்துவிடுங்கள்.

தமிழிசை செளந்தரராஜனுக்கு, ஆளுநர் பதவி வழங்கியதுபோல், எச்.ராஜாவுக்கும் ஆளுநர் பதவி வழங்க வேண்டும். ஆளுநர் பதவிக்காகத்தான் அவர் இப்படி பேசி வருகிறார் என்று விமர்சித்தார்