சம்மனுக்கு வீட்டிற்கு வந்த போலீசார்...சீமானிடம் இருந்து வந்த ரியாக்ஷன்!!
இரண்டாவது முறையாக நடிகை விஜயலக்ஷ்மி அளித்த புகாரின் பேரில், ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில், அதற்கு சீமான் பதிலளித்துள்ளார்.
விஜயலக்ஷ்மி சீமான்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமண செய்து கொள்வது கூறி ஏமாற்றிவிட்டதாக, நடிகை விஜயலக்ஷ்மி அவர் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
அதனை தொடர்ந்த்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், சீமான் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. அதனை தொடர்ந்து அவர் தரப்பில் அவரது வக்கீல் சென்னை வளசரவாக்க காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி சில விளக்கங்களை அளித்தார். இதற்கிடையில், நடிகை விஜயலக்ஷ்மி தற்கொலை செய்து கொள்வதாகவும், அதன் காரணமாக பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கூறி, தமிழர் முன்னேற்றப் படையின் தலைவர் வீரலட்சுமி சென்னை போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார்.
இரண்டாவது சம்மன்னையும் ஏற்கமறுத்த சீமான்
இந்நிலையில், சிறுது மணி நேரங்களுக்கு முன்பு நாம் தமிழர் சீமான் இல்லத்திற்கே சென்று காவல் துறையினர் இரண்டாவது சம்மன் அளித்துள்ளனர்.ஆனால் தற்போது சீமான், அந்த சம்மனை ஏற்கமறுத்துள்ளதாக தெரிவிக்கப்டுகிறது.
நாளை கட்சியின் கலந்தாய்வு கூட்டம் இருக்கும் காரணத்தினால், தன்னால் நேரில் ஆஜராக முடியாது என சீமான் கூறியுள்ளதாகவும், தொடர்ந்து தன்னை குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்து வரும் காரணத்தினால், விஜயலக்ஷ்மி மீது சீமான் வழக்கு தொடரவுள்ளதாகவும் கூறப்படுகிறது.