வெற்றிமாறன் கெஞ்சினாரு..? விடுதலை படத்தை இதனால் தான் ஒத்துக்கல - சீமான்
வெற்றிமாறன் விடுதலை படத்தில் தானே நடித்திருக்க வேண்டும் என நாம் தமிழர் சீமான் தெரிவித்துள்ளார்.
விடுதலை
சூரி கதையின் நாயகனாக நடித்து, விஜய் சேதுபதி, கவுதம் வாசுதேவ் மேனன் என பலர் நடித்து வெளியான "விடுதலை" படம் விமர்சன ரீதியிலாக மட்டுமின்றி வசூலிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
பெருமாள் வாத்தியார் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பு பலரையும் பெரிதாக கவர்ந்தது. அந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிப்பதாக இருந்தது பாரதிராஜா. ஆனால் வயதின் காரணமாக அவர் விலகி கொள்ள, பின்னர் விஜய் சேதுபதி நடித்தார்.
மறுத்த சீமான்
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பெருமாள் வாத்தியார் கதாபாத்திரத்தில் தானே நடித்திருக்க வேண்டும் என கூறினார்.
கதாபாத்திரத்திற்காக தாடி வைக்க வேண்டும் என்றும், அப்போது கட்சி பணிகள் போன்ற வேறு சில காரணங்களினாலும் தான் நடிக்க முடியாமல் போனது என விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார் சீமான்.