சீமான் எஸ்.பி வேலுமணியிடம் 3 கோடி ரூபாய் வாங்கினார்- ஜெகத் கஸ்பர் குற்றச்சாட்டு
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் பணம் பெற்றுள்ளதாக ஜெகத் கஸ்பர் குற்றம்சாட்டியுள்ளார்.
சமீபத்தில் விடுதலை புலிகள் அமைப்பைச் சேர்ந்த பொட்டு அம்மான் குறித்து சீமான் பேசியதாக ஆடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.
அது கடும் சர்ச்சைகளை எழுப்பியிருந்தது. நாம் தமிழர் கட்சி மீதும் சீமான் மீதும் கடுமையான விமர்சனங்கள் எழுந்திருந்தன.
இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆய்வாளர் ஜெகத் கஸ்பர் ஐபிசி தமிழுக்கு அளித்துள்ள நேர்காணலில் நாம் தமிழர் கட்சி கருவிலேயே குற்றமான கட்சி என்று தெரிவித்துள்ளார்.
மேலும் நாம் தமிழர் கட்சி பாஜகவிற்காக வேலை செய்வதாகவும் தெரிவித்துள்ளார். முழுமையான நேர்காணலுக்கான இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.