சீமானின் ஆண்டு வருமானம் ரூ.1000 இல்லை: உண்மையிலேயே வருமானம் இதுதான்- அதிகாரப்பூர்வ தகவல்

election year seeman income
By Jon Mar 18, 2021 01:19 PM GMT
Report

திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக சீமான் வேட்பு மனுத்தாக்கல் செய்த போது, அதில் அவரது ஆண்டு வருமானம் ரூ.1000 என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த விவகாரம் கடும் விமர்சனத்தை ஏற்படுத்திய நிலையில், அது பிழையான ஒன்று என விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் வெளியான அறிக்கையில், சீமான் தாக்கல் செய்த வேட்பு மனுவில் அவரது ஆண்டு வருமானம் தவறுதலாக இடம்பெற்றுள்ளது.

அவர் வருமான வரித்துறைக்கு செலுத்திய தொகைதான் ரூ.1,000. அவரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 60 ஆயிரம். எனவே மேற்கண்ட தவறைத் திருத்தி புதிய பிரமாணப் பத்திரம் இன்று (மார்ச் 18) தாக்கல் செய்யப்படும் என தெரிவித்துள்ளது.