ஒரு நாள் தொப்பி போட்டுக்கிட்டு வேஷம் போடுறவன் இல்ல நான் - விஜய்யை சீண்டிய சீமான்
நான் ஒரு நாள் தொப்பி போட்டு வேடம் போடுபவன் கிடையாது என விஜய் குறித்த கேள்விக்கு சீமான் பதிலளித்துள்ளார்.
சீமான்
கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், திமுகவுக்கான எதிரான வாக்குகளை ஒன்றிணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி பேசியிருப்பது வரவேற்கத்தக்கது. இதில் முதன்மையான பங்கு என்னுடையதாக இருக்கும், நான் மட்டும் தனியாகத்தான் இருப்பேன். இந்த நாட்டு மக்களுக்கு ஒரு நோய் இருக்கிறது.
விஜய் இப்தார் நிகழ்ச்சி
கூட்டணி இல்லாமல் எப்படி வெல்ல முடியும் என கேட்கிறீர்கள். கொள்கை இல்லாமல் எப்படி வெல்ல முடியும் என யாரையும் கேட்பதில்லை. கொள்கை இல்லாமல் கூட்டணி இருந்தால் வென்று விடலாம் என்ற நிலையை வரவேற்கிறீர்களா? என்றார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், நடத்திய இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி குறித்த கேள்விக்கு, "எனக்கு நிறைய உறவுக்காரர்கள் இஸ்லாம் மதத்தில் இருக்கிறார்கள். நான் ஒரு நாள் தொப்பி போட்டு வேடம் போடுபவன் கிடையாது. நான் மக்களின் உணவுக்கானவன் அல்ல அவர்களின் உரிமைக்கானவன்.
இதுபோன்று செய்வது விஜய்க்கு பிடித்து இருக்கிறது அதனால் செய்கிறார். அவர் சென்று வந்ததால் எந்த பாதிப்பும் இல்லை. நாட்டிற்கு மக்களுக்கும் இதனால் என்ன பிரச்சனை ? ஒன்றும் இல்லையே அதனால் அதைப் பற்றி பேச தேவை இல்லை எனத் தெரிவித்துள்ளார்.