தமிழையும் தமிழர்களையும் வஞ்சிப்பதுதான் திராவிட மாடலா? - சீமான் கேள்வி
சிதம்பரம் நடராசர் கோயிலில் தமிழில் வழிபாடு செய்ய அனுமதிக்க மறுக்கும் தீட்சிதர்களுக்கு ஆதரவாய் நின்று, தமிழையும், தமிழர்களையும் வஞ்சிப்பதுதான் திராவிட மாடலா? என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சிற்றம்பலம் மேடையில் நின்று தமிழில் வழிபாடு செய்யவே போராட வேண்டிய இழிநிலை இருப்பது தமிழர்களுக்கு நேர்ந்திருக்கும் பெருந்துயரம்.
சிதம்பரம் நடராசர் கோயிலைச் சிறப்புச்சட்டமியற்றி, அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர வேண்டும் எனவும் அதன்மூலம் தமிழில் வழிபாடு செய்ய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் நடராசர் கோயிலில் தமிழில் வழிபாடு செய்ய அனுமதிக்க மறுக்கும் தீட்சிதர்களுக்கு ஆதரவாய் நின்று, தமிழையும், தமிழர்களையும் வஞ்சிப்பதுதான் திராவிட மாடலா?https://t.co/Gf36h9y4XC@CMOTamilnadu @mkstalin pic.twitter.com/wSmgoUYqXf
— சீமான் (@SeemanOfficial) March 26, 2022