எல்லாத்துக்கும் வரி விதித்தால்...எப்படி வாழ்வது..? நா.த.க சீமான் கேள்வி
திருவள்ளூர் தொகுதி நாம் தமிழர் வேட்பாளர் ஜெகதீஷ் சுந்தரை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் மேற்கொண்டார்.
சீமான் பிரசாரம்
அப்போது அவர் பேசியது வருமாறு, 3 ஆண்டுகளில் என்ன செய்தோம் என்று கூறி வாக்கு கேட்க முடியவில்லை அவர்களால்(திமுக). 1000 கொடுத்தோம்..1000 கொடுத்தோம் என்று தான் பேசுகிறார்கள்.
10 ஆண்டுகள் ஆட்சி செய்த பாஜகவால் அவர்கள் செய்த சாதனையை சொல்லி ஓட்டு கேட்கமுடியவில்லை. காங்கிரஸ் கட்சி அதற்கு முன்பு ஆட்சி செய்தது. என்ன வளர்ந்தது நாடு. வளரும் நாடுகளின் பட்டியலிலேயே இந்தியா இல்லை. இதனை மாற்றும் வாய்ப்பு ஒவ்வொருவர் கையிலும் உள்ளது. எதற்கு இந்தியாவிற்கென ஒரு கட்சி.
அவரவர் மாநிலத்தை அவரவர் ஆளுகிறார்கள். இந்தியாவை யார் ஆள்வது. கூடி பேசி ஆட்சி செய்யலாம். சுயற்சி முறையில் ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு வாய்ப்பு தாருங்கள்.
நிதி வரவில்லை
2 முறை முடித்து 3-வது முறையாக மோடி தேர்தலில் நிற்கிறார். இது சர்வாதிகாரம் அல்ல, கோடுகோன்மைக்கு வித்திடும். பயங்கரவாதம் ஒழிக்கப்படும் என்றார்கள். நடக்கவில்லை. ஊழல் லஞ்சம் ஒழியும் என்றால் எதற்கு IT, ED ரைட். பணம் செல்லாது என்று சொன்னதாலும், GST'யின் காரணமாக தான் நாட்டின் பண மதிப்பே விழுந்தது.
இன்னொரு ஒரு முறை பாஜகவிடம் வாக்களித்தால், நாட்டை மறந்திருங்கள். ஏற்கனவே 90% சதவீத நாட்டை விற்று விட்டார்கள். வருவாயை பெருக்கும் மாநிலங்களில் 2-வது இடத்தில் தமிழகம் உள்ளது.
ஆனால், வெள்ளம் வந்தபோது நிதி வரவில்லை.
எல்லாத்துக்கும் வரி...நேரடி வரி, மறைமுக வரி..எல்லாத்துக்கும் வரி...முழு பைத்தியம் வந்தால் பாதிப்பு இல்லை....அரை பைத்தியத்தை நம்ப முடியாது.
தேர்விற்கு 2 குடிப்பகம் இருக்கு..அங்கு 2 படிப்பகம் வரவேண்டும் என நினைக்கிறோம். புரட்சி எப்போதும் வெல்லும்...நமது வெற்றி அதனை சொல்லும்.