சீமான் மீது போலீசார் வழக்குபதிவு
செங்கல்பட்டு சட்டப்பேரவை தொகுதியில் விதிமுறையை மீறி பிரசாரம் செய்ததாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். நேற்று காஞ்சிபுரத்தில் பிரசாரத்தை முடித்துக்கொண்டு செங்கல்பட்டில், தன்னுடைய ஆதரவாளருக்காக சீமான் பிரசாரம் மேற்கொள்ள சென்றார்.
அப்போது மணி 10ஐ கடந்துவிட்டதால், போலீசார் மின்விளக்குகளை துண்டித்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. பின்னர் திறந்தவெளி வேனில் சீமான் பிரசாரம் மேற்கொண்டார், அப்போது பேசுகையில், விவசாயி நலமுடன் இல்லாவிட்டால் சோறுகூட கிடைக்க வாய்ப்பில்லை, பணநாயகத்தை ஒழித்து ஜனநாயத்தை மேம்படுத்த நாம் தமிழருக்கு வாக்களியுங்கள் என்றார்.
இந்நிலையில் தேர்தல் விதிமுறையை மீறி இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் மேற்கொண்டதாக சீமான் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர்.