இந்தியா ஒரே நாடு இல்லை; வடமாநிலங்களில் பல கட்ட தேர்தல் ஏன்? சீமான்

Seeman India
By Karthikraja Sep 19, 2024 05:30 PM GMT
Report

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு நான் பெரிய எதிரி என சீமான் தெரிவித்துள்ளார்.

ஒரே நாடு ஒரே தேர்தல்

பாரளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு ஒரே கட்டத்தில் தேர்தலை நடத்தும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 

seeman

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு நான் பெரிய எதிரி என தெரிவித்துள்ளார்.

சீமான்

மேலும் பேசிய அவர், "இந்தியா ஒரே நாடு இல்லை. ஒரு மொழி என்றால் ஒரே மொழி என்றால் இந்தியாவில் பல நாடுகள் பிறக்கும். பல மொழிகள் என்றால் இந்தியா ஒரே நாடாகவே இருக்கும். பாஜக அரசு ஒரே தேர்தல், ஒரே ரேஷன் அட்டை, ஒரே கல்விக் கொள்கை என்று வந்தால் அது கஷ்டம்.

seeman

இந்தியா பல தேசிய இனங்களின் சிறை கூடாரமாக இருக்கக் கூடாது. அதற்காக நாம் சுதந்திரம் பெறவில்லை.ஒரே நாடு ஒரே தேர்தல் என்று பேசுபவர்கள் குறைந்த தொகுதிகளை கொண்ட வட மாநிலங்களில் பல கட்டங்களாக தேர்தலை நடத்தி விட்டு , 40 தொகுதிகளை கொண்ட தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்தியது ஏன்" என கேள்வி எழுப்பினார்.