கருணாநிதியை பிடிக்காம் போனதற்கும், எம்.ஜி.ஆரை பிடிச்சதற்கும் இது தான் காரணம் - சீமான்

MGR Naam tamilar kachchi M Karunanidhi Seeman
By Karthick Apr 02, 2024 05:35 AM GMT
Report

திண்டுக்கல் தொகுதியில் கட்சி வேட்பாளரை ஆதரித்து நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார்.

பரப்புரை தேர்தல்

நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் தேர்தல் களம் பரபரப்பாகியுள்ளது. அனைத்து கட்சியினரும் தொடர்ந்து தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள்.

seeman-on-why-he-doesnt-like-karunanidhi

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் கட்சி வேட்பாளர் கயிலை ராஜனை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியது வருமாறு, நாங்கள் வெற்றிபெற்றால், படித்தவர் படிக்காதவர் என அனைவருக்கும் அரசு வேலை அளிப்போம்.

சீமான் கொடுத்த ஆறுதல்...இடைத்தேர்தலில் கொலையான நிர்வாகியின் மனைவிக்கு சீட்

சீமான் கொடுத்த ஆறுதல்...இடைத்தேர்தலில் கொலையான நிர்வாகியின் மனைவிக்கு சீட்

இந்து என்ற உணர்வைத் தூண்டி இந்த நிலத்தை கைப்பற்ற பார்க்கிறார்கள்..அதற்கு ஏமாறக்கூடாது. நீ இந்தியனும் அல்ல, திராவிடனும் அல்ல, தமிழன் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

கருணாநிதியை பிடிக்காததற்கு....

கருணாநிதியை எனக்கு பிடிக்காமல் போனதற்கு காரணம் என் அண்ணனை(பிரபாகரன்) அவருக்கு பிடிக்கவில்லை. அதனால் எனக்கு பிடிக்கவில்லை. அதில் கொள்கையோ தனிப்பட்ட காரணமோ இல்லை.

seeman-on-why-he-doesnt-like-karunanidhi

ஆனால் அண்ணனை, மகனை போல் நேசித்த எம்.ஜி.ஆர் அவருக்கு அனைத்து உதவிகளையும் செய்தார். அதனால் அவரை எனக்கு பிடிக்கிறது. மேலும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தேர்தலை போட்டியிடாததை குறித்தும் பேசிய சீமான், ஏன் போட்டியிடவில்லை என காரணம் கேட்டால், பணம் இல்லை எனக் கூறுகிறார். காசே இல்லாமல் நான் 40 தொகுதிகளில் போட்டியிடுகிறேனே என்று சீமான் பேசினார்.