Seeman- ஐ தேசிய ஊடகங்கள் புறக்கணிப்பது ஏன்?
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
கூட்டணி கட்சிகள், தொகுதி பங்கீடு, அறிக்கை என பரபரப்பான சூழல் நிலவுகிறது, இந்நிலையில் NDTV-யின் Tamilnadu Summit பேட்டியில் அரசியல் தலைவர்கள் பங்கேற்று அரசியல் கள நிலவரம் குறித்து தங்கள் கட்சியின் கொள்கைகள் கோட்பாடுகள் குறித்தும் பேசினர்.
தவெக தலைவர் விஜய் முதன்முறையாக பங்கேற்று தன்னுடைய ரோல் மொடல் யார்? ஜனநாயகன் சென்சார் விவகாரம், கரூர் விபத்து குறித்தும் கருத்து தெரிவித்திருந்தார்.
சுமார் ஒருமணிநேரம் நடந்த கலந்துரையாடல் குறித்து செய்தியாளர்களும் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டுள்ளனர். NDTVயிலும் செய்திகள் வெளியானது.
இதற்கிடையே சீமானை தேசிய ஊடகங்கள் புறக்கணிப்பது ஏன்? என்பது குறித்தும் அரசியல் நிலவரம் குறித்தும் பேட்டியளித்துள்ளார் அரசியல் விமர்சகரான சுமன் சி.ராமன்