வனப்பாதுகாப்பு சட்டத் திருத்த வரைவு மசோதாவை தமிழக அரசு ஏற்கிறதா? எதிர்க்கிறதா? - சீமான்
தமிழக மீனவர் ராஜ்கிரண் இலங்கை கடற்படையால் கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்காமல், அந்நாட்டுடன் மத்திய அரசு நட்பு பாராட்டுவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கூடங்குளம் அணுக்கழிவு மையம் அமைக்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்தும், வனப்பாதுகாப்பு சட்டத் திருத்த வரைவினை திரும்பப் பெறக் கோரியும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறும்போது, காடுகள் மீது அக்கறையின்றி வனப்பாதுகாப்பு சட்டத் திருத்த வரைவு மசோதா கொண்டு வரப்படும் நிலையில், அதனை தமிழக அரசு ஏற்கிறதா? எதிர்க்கிறதா எனக் கேள்வி எழுப்பினார்.
கூடங்குளத்தில் இரு அணு உலைகள் செயல்பட்டு வரும் நிலையில் ஒன்றிய அரசு மேலும் அணு உலைகளை அமைக்க முயற்சி செய்வதாகவும் கூறினார்.
தமிழக மீனவர் ராஜ்கிரண் இலங்கை கடற்படையால் கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்காமல், அந்நாட்டுடன் மத்திய அரசு நட்பு பாராட்டுவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றஞ்சாட்டினார்.
You May Like This