திமுகவின் 100 நாள் புகார் பெட்டி எங்கே?சாவி தொலைந்துவிட்டதா?இல்லை பெட்டி தொலைந்துவிட்டதா? சீமான் கேள்வி

Seeman NTK Naam Tamilar Katchi
By Thahir Jun 27, 2021 10:12 AM GMT
Report

மக்களின் பிரச்சினைகளைக் கடிதங்களாய் பெற்ற அப்பெட்டிகள் எங்கே? அதனை எப்போது திறப்பார்கள்? சாவி தொலைந்துவிட்டதா? இல்லை! பெட்டியே தொலைந்துவிட்டதா? என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைபபாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுகவின் 100 நாள் புகார் பெட்டி எங்கே?சாவி தொலைந்துவிட்டதா?இல்லை பெட்டி தொலைந்துவிட்டதா? சீமான் கேள்வி | Seeman Ntk

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் திமுக தான் எல்லாவற்றையும் தீர்க்கும் மாமருந்து; தமிழகத்தின் அத்தனைப் பிரச்சினைகளுக்கும் திமுக ஆட்சியமைந்தவுடன் 100 நாட்களுக்குள் தீர்வு எட்டப்படும் என வானளவ அளந்தார்கள்.

50 நாட்களைக் கடந்துவிட்டோம். பாதி காலக்கெடு முடிந்துவிட்டது. 

என்னவானது தமிழகத்தின் பிரச்சினைகள்? எப்போது எல்லாவற்றையும் தீர்க்கப் போகிறார்கள்? அதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லையே!

மக்களின் பிரச்சினைகளைக் கடிதங்களாய் பெற்ற அப்பெட்டிகள் எங்கே? அதனை எப்போது திறப்பார்கள்? சாவி தொலைந்துவிட்டதா? இல்லை! பெட்டியே தொலைந்துவிட்டதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.