ஸ்டாலினுக்கு அடுத்து தமிழகத்தின் ஆளுமை சீமான் தான்!
கடந்த சில தினங்களுக்கு முன்பு, அதிமுகவின் அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்னையன், தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சி தமிழ்நாட்டிற்கும், அதிமுகவுக்கும், திராவிட கொள்கைகளுக்கும் நல்லதல்ல என்றும் பாஜக இரட்டை வேடம் போடுகிறது என்றும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
ஓபிஎஸ் - ஈபிஎஸ் விளக்கம்
பொன்னையனின் இந்த விமர்சனம் பாஜகவினர் மற்றும் அதிமுகவினருக்கு இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய அதிமுகவின் ஒருங்கிணைபாளர் ஓபிஎஸ் பாஜகவை குறித்து பொன்னையன் பேசியிருப்பது அவரின் சொந்த கருத்தாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்தார்.
பாஜக - காக்கா கூட்டம்
பொன்னையனை தொடர்ந்து மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, பொன்னையன் கூறிய கருத்து அவருடைய பார்வையில் சொல்லப்பட்டவை எனறும் தமிழகத்தில் தற்போது அதிமுக மட்டுமே எதிர்க்கட்சி, அதிமுக காக்கா கூட்டம் அல்ல. கொள்கை கூட்டம் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் பாஜக-விற்கு வரும் கூட்டம் இரை போட்டால் வரும் காக்கா கூட்டம் போன்றது என கூறினார்.
அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள பாஜக-வை அதிகமுவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள பொது வெளியில் இவ்வாறு விமர்சித்து பேசுவது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ஐபிசி தமிழின் மெய்ப்பொருள் நிகழ்ச்சியில் நெறியாளர் லியோ ஸ்டாலின் அவர்கள் அரசியல் விமர்சகரான திரு. ரவீந்திரன் துரைசாமி அவர்களிடம் எழுப்பிய பல்வேறு கேள்விகளும் அதற்கு அவர் பதிலளித்து பேசியதும் உங்களுக்காக.