டெபாசிட் இழந்த சீமான் - ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத நாதக

Naam tamilar kachchi Seeman Tamil Nadu Election 2026
By Karthikraja May 04, 2026 12:34 PM GMT
Report

நாம் தமிழர் கட்சி ஒரு தொகுதிகளில் கூட வெற்றி பெறவில்லை.

டெபாசிட் இழந்த சீமான்

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில், தமிழக வெற்றிக்கழகம் 109 தொகுதிகளிலும், திமுக கூட்டணி 74 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 51 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.

இந்த தேர்தலில் 234 தொகுதிகளிலும், போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. 

டெபாசிட் இழந்த சீமான் - ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத நாதக | Seeman Lost Deposit Ntk Didnt Win Single Seat

காரைக்குடியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 16,646 வாக்குகளுடன் 4வது இடம் பெற்று, டெபாசிட்டையும் இழந்துள்ளார்.

கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் 35 லட்சம் வாக்குகளுடன் 8.19% பெற்று மாநில கட்சி அங்கீகாரம் பெற்றது.மேலும், 3வது தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.

தற்போது விஜய்யின் வருகை நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கியை கடுமையாக பாதித்துள்ளது.