திருவொற்றியூரில் சீமான் தோல்வி

1 week ago

திருவொற்றியூர் தொகுதியில் திமுக வேட்பாளரான கேபி சங்கர் அமோக வெற்றி பெற்றுள்ளார்.

சட்டப்பேரவை தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிட்டதால் திருவொற்றியூர் தொகுதிக்கு நட்சத்திர அந்தஸ்து பெற்றதாக மாறியது.

இவரை எதிர்த்து திமுக சார்பில் கேபி சங்கர் மற்றும் அதிமுக சார்பில் குப்பன் போட்டியிட்டனர், பலமான போட்டி நிலவியதுடன் அனைத்து கட்சி வேட்பாளர்களும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டனர்.

இன்று காலை முதலே வாக்குகள் எண்ணப்பட்டு வந்த போது, சீமான் பின்னடைவை சந்தித்து வந்தார், இந்நிலையில் திமுக வேட்பாளரான கேபி சங்கர் அமோக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

சீமானுக்கு 3வது இடம் கிடைத்துள்ளது, கேபி சங்கரை விட 37,510 வாக்குகள் குறைவாக பெற்று தோல்வி அடைந்துள்ளார் சீமான்.

மேலும் 37,661 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் குப்பனை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்