கிருஷ்ண பரமாத்மாவின் அவதாரம் எடுப்பேன் : சீமான்
நான் கிருஷ்ண பரமாத்மா பேரன். அநீதி அக்கிரமம் நடக்கும் இடத்தில் நான் வந்து நிற்பேன் என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
ஒட்டை பேருந்து பயணம்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் , முதல்வரின் ஓராண்டு சாதனை என்று அரசே மக்கள் காசை எடுத்து சாதனை சாதனை என்று கூட்டம் போட்டு சாதனை என்று கூறுவதாக பேசிய சீமான் காமராஜர் அதுபோல் கூறவில்லையே. படம் எடுத்து விளம்பரம் தேடுவது தேவையில்லாதது.
பேருந்தில் பெண்களுக்கு இலவசம். பக்கத்தில் மனைவியுடன் அமர்ந்து செல்லும் கணவனுக்கு நான்கு மடங்கு கட்டணமாக உள்ளது. பேருந்து ஓட்டை. பேருந்தில் அமர்ந்து பயணம் செய்வோர் கூட குடைபிடித்து தான் சொல்லவேண்டியுள்ளது.

நாங்கள் இலவசத்தை ஒழிப்பவர்கள். இலவசம் என்பது ஒரு ஏமாற்றம், வெற்று திட்டம். யார் பணத்தை எடுத்து, இலவசத்தை கொடுப்பது. இலவசம் என்ற பெயரில் ஏமாற்றுகிறார்கள். அண்ணாமலை திமுக ஊழல் குறித்து பேசுகிறார். அவருக்கு என்ன தகுதி இருக்கிறது. பாஜக ஆட்சியில் பிரான்சில் இருந்து ரபேல் விமானம் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு வரும் பொழுது பாதுகாப்பு அமைச்சகத்தில் இருந்த கோப்புகள் காணாமல் போனது எப்படி?. நீரவ் மோடி இந்தியாவை விட்டு வெளிநாட்டுக்கு தப்பி செல்லும் போது 500 கோடி ரூபாயை பாஜகவுக்கு கொடுத்த பின்புதான் நாட்டை விட்டு நான் தப்பினேன் என்று கூறினார்.

நான் கிருஷ்ண பரமாத்மா பேரன்
நான் கிருஷ்ண பரமாத்மா பேரன். அநீதி அக்கிரமம் நடக்கும் இடத்தில் நான் வந்து நிற்பேன். இலங்கையில் இந்தியாவின் தவறான வெளியுறவுக் கொள்கை நாளில் லட்சக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
ஜீயர்கள், திமுக அமைச்சர்கள் நடமாட முடியாது என்று பேசுவார்கள். அவர்கள் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. ஆனால் என் மீது எனது கட்சியினர் மீது வழக்குகளை போடுவார்கள் இவ்வாறு தெரிவித்தார்.