கமலுக்கு பிக்பாஸ் மட்டும் போதும்: சீமான் பரபரப்பு பேச்சு
தேர்தல் வரைவு திட்டம் வெளியிடாததற்கான காரணம் குறித்து பேசியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். சட்டப்பேரவை தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் சீமான் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்த பின்னரே இவ்வாறு பேசியுள்ளார். மேலும் கூறுகையில், உண்மையிலேயே என்னிடம் காசு இல்லை, அதனால் தான் தேர்தல் வரைவு திட்டமும் வெளியிடவில்லை.
இந்த முறை திடீரென தேர்தல் வந்ததால் திட்டமிடுதல் இல்லை. பணம் இருக்கிறவர்தான் அரசியல் செய்ய முடியும் என்ற கோட்பாட்டை ஒழிக்கவில்லை என்றால் முதலாளிகளின் லாபத்தை நோக்கிய அமைப்பாக மாறிவிடும்.
மனம் உள்ளவனும் வெல்லலாம். இல்லையென்றால் கேடுகெட்ட பணநாயகம்தான் வெல்லும். ஜனநாயகம் வெல்லாது.
என்னிடம் பணம் இல்லை, கமலுக்கு பிக்பாஸ் போதும். ஹெலிஹாப்டரில் போகலாம்" எனவும் தெரிவித்தார்.