அருந்ததியினர் வந்தேறிகள் , சீமானுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்

Seeman
By Irumporai Feb 18, 2023 06:38 AM GMT
Report

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பிரச்சார களம் சூடு பிடித்துள்ளது. தலைவர்கள் பலரும் ஈரோடு கிழக்கில் முகாமிட்டு தங்கள் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார்கள்.

சீமான் மீது புகார்

இந்நிலையில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய 10 க்கும் மேற்பட்ட தலித் அமைப்பினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளனர்.

ஈரோட்டில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அருந்ததியர் சமூகத்தை தூய்மை பணிக்கு விஜயநகர பேரரசு ஆந்திராவிலிருந்து அழைத்து வந்ததாக பேசியதாகவும்.

அருந்ததியினர் வந்தேறிகள் , சீமானுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த பொதுமக்கள் | Seeman In Sc St Act After Erode East Campaign

புகார் மனு

பூர்வகுடி தமிழர்களாக வாழ்ந்து வரும் அருந்ததியர் இன மக்களை அவரது பேச்சு இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாகவும் கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், அருந்ததியினர் கூட்டமைப்பு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட தலித் அமைப்பினர் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து புகார் மனு அளித்தனர்.

தேர்தல் பிரச்சாரத்தில் விதிமுறைகளை மீறி குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்தி பேசிய சீமான் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து ஈடுபட அவருக்கு தடை விதிப்பதுடன் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யவும் வலியுறுத்தினர்.