இலவசத்தை விமர்சித்த சீமான்: மேட்டூரில் பிரசாரம்

Seeman
By Fathima Mar 26, 2026 08:08 AM GMT
Report

சேலத்தின் மேட்டூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வித்யா வீரப்பனை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் பெய்யும் மழையை கடலில் கலக்க விடாமல் ஏரி,குளம், குட்டைகளில் சேகரித்தாலே நாம் அடுத்தவரிடம் தண்ணீருக்காக கையேந்த தேவை இருக்காது.

நாங்கள் ஆயிரம், பிரட்ஜ், வாஷிங் மெஷின் இலவசமாக தரமாட்டோம், அதையெல்லாம் நீங்களே வாங்கி கொள்ளும் அளவுக்கு வசதிகளை ஏற்படுத்தி தருவோம்.

கல்வி, மருத்துவம் சரியாகவும், சமமாகவும் அனைவருக்கும் இலவசமாக வழங்குவோம்.

படித்தவர், படிக்காதவர் என பாகுபாடு பார்க்காமல் அனைவருக்கும் அரசு வேலை வழங்குவது, படிக்காதவர் என்ற நிலையை உருவாக்குவதே எங்கள் இலக்கு என தெரிவித்தார்.