விஜயலட்சுமியிடம் விசாரணை; சீமானுக்கு திடீர் உடல்நலக் குறைவு - மருத்துவமனையில் அனுமதி!
சீமான் திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விஜயலட்சுமி புகார்
நடிகை விஜயலட்சுமி, சீமான் மீது திருமண மோசடி புகார் கொடுத்திருந்தார். அதில் 2008-ம் ஆண்டு சீமானுக்கும் தமக்கும் மதுரையில் திருமணம் நடந்தது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.
இதற்கிடையில், பெங்களூர் சென்று அங்கிருந்தபடியே சீமான் மீது பல்வேறு புகார்களை முன்வைத்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வந்தார். இந்நிலையில், சென்னை வந்த விஜயலட்சுமி, போலீசில் சீமான் மீது புகார் கொடுத்தார்.
மருத்துவமனையில் அனுமதி
இந்தப் புகார் தொடர்பாக சென்னை ராமாபுரம் காவல் நிலையத்துக்கு விஜயலட்சுமி வரவழைக்கப்பட்டார். அவரிடம் கோயம்பேடு காவல் மாவட்ட அதிகாரி உமையாள் விசாரணை நடத்தினார்.
இதனிடையே கோவை பல்லடம் அருகே போராட்டம் ஒன்றில் பங்கேற்பதாக சீமான் அறிவித்திருந்தார். அப்போராட்டத்துக்கு செல்வதற்கு முன்பாக சீமானுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் சீமான் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.