சீமான் - நீ என்ன முதல்வரா..? காசு வாங்கிட்டு ஏமாத்திருக்கா? மறுபடியும் வந்த வீரலட்சுமி
நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தற்போது மீண்டும் மற்றொரு புகாரை வீரலட்சுமி முன்வைத்துள்ளார்.
சீமான் வீரலட்சுமி
நடிகை விஜயலக்ஷ்மி விவகாரத்தில் அவருக்கு உதவியாக நின்ற வீரலக்ஷ்மிக்கும் நாம் தமிழர் கட்சி மற்றும் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு மத்தியில் பெரும் சண்டைகள் ஏற்பட்டது.
தற்போது விஜயலக்ஷ்மி புகாரை வாபஸ் பெற்று பெங்களூர் திரும்பிய நிலையில், தொடர்ந்து ஏதோ ஒரு வகையில் வீரலட்சுமி சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியினரை சீண்டி வருகின்றார். இதன் தொடர்ச்சியாக தான் வீரலட்சுமி தற்போது மற்றொரு பிரச்சனையை கிளப்பி இருக்கின்றார்.
குடியுரிமை வாங்கி தருவதாக ஏமாற்றினார்
இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், ஈழ தமிழர்களிடம் நாம் தமிழர் கட்சியினரும், சீமானும் தொடர்ந்து பணம் வாங்கி கொண்டு குடியுரிமை வாங்கி தருவதாக ஏமாற்றி வருகின்றார் என பகிரங்க குற்றசாட்டை முன்வைத்துள்ளார்.
இது குறித்தான ஆதாரத்தை தான் புகாரில் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்ட வீரலட்சுமி, நாம் தமிழர் நிர்வாகிகள் மற்றும் சீமான் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.