சீமான் இப்படி சொல்வது போலியானது: பரபரப்பு குற்றச்சாட்டு
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கட்சியும் மக்களின் வாக்குகளை ஈர்க்க, பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன, தேர்தல் விருப்ப மனுக்களை பெறுவதற்கான நாட்களையும் அறிவித்து விட்டன. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 300 பேர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தனர்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் நிர்வாகிகள், சமத்துவம் பேசுவதும், தம்பி என சீமான் அழைப்பதும் போலியானது என தெரிவித்துள்ளனர்.
மேலும் சீமான் ஜனநாயகமின்றி செயல்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
தேர்தல் நெருங்கும் வேளையில் 300 பேர் கட்சி மாறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.