தமிழனே ஓசி என கூறுபவரை யோசி; நாம் தமிழர் தம்பிகளை கொஞ்சம் நேசி - சீமான் ரைமிங் பேச்சு!

Naam tamilar kachchi Seeman Lok Sabha Election 2024
By Swetha Apr 12, 2024 05:45 AM GMT
Report

நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக சீமான் வாக்கு சேகரித்தார்.

தமிழனே ஓசி

கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளரான ஜெகதீச பாண்டியன் மற்றும் நாமக்கல் தொகுதி வேட்பாளர் கனிமொழி ஆகியோருக்கு உள்ளிட்டோரை ஆதரித்து பிரச்சாரம் நடைபெற்றது.

தமிழனே ஓசி என கூறுபவரை யோசி; நாம் தமிழர் தம்பிகளை கொஞ்சம் நேசி - சீமான் ரைமிங் பேச்சு! | Seeman Election Campaign In Kallakuruchi

அதில்,பங்கேற்ற அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு சேகரித்து பேசியபோது, “50 ஆண்டுகாலம் ஒரே சின்னத்திற்கு வாக்களித்து விட்டீர்கள். அவர்களால் உங்களுக்கு ஒன்றும் நடக்கவில்லை. சமூக நீதி என பேசி வரும் திமுக-வினருககு கிறிஸ்துவர்கள் மற்றும் முஸ்லிம்களின் ஓட்டு மட்டும் தேவை.

ஆனால், அவர்கள் தேர்தலில் போட்டியிட ஒரு பொதுத் தொகுதியையும் ஒதுக்கவில்லை. தம்பி உதயநிதி ஒரே ஒரு செங்கலை எடுத்துக் கொண்டு வலம் வருகிறார்.

கைது செய்யாவிட்டால் போராட்டம் வெடிக்கும் - அரசை எச்சரிக்கும் சீமான்..!

கைது செய்யாவிட்டால் போராட்டம் வெடிக்கும் - அரசை எச்சரிக்கும் சீமான்..!

சீமான் ரைமிங் பேச்சு

மகளிர் உரிமை தொகை வழங்க தகுதி பார்ப்பதற்கு நீ யார்? அதென்ன உங்கள் அப்பன் வீட்டு காசா, இல்லை உங்கள் தாத்தா வீட்டு காசா? என்று கேள்வி எழுப்பினார்.

தமிழனே ஓசி என கூறுபவரை யோசி; நாம் தமிழர் தம்பிகளை கொஞ்சம் நேசி - சீமான் ரைமிங் பேச்சு! | Seeman Election Campaign In Kallakuruchi

எங்கள் வரிப் பணத்தில் உதவித்தொகை வழங்குவதற்கு எங்களிடமே எதற்கு தகுதி பார்க்க வேண்டும்? அரசு பேருந்தில் இலவசம், யார் வழங்கச் சொன்னது? பின் வந்து ஓசி என பேசுவது."தமிழனே ஓசியென கூறுபவர்களை பற்றி கொஞ்சம் யோசி! நாம் தமிழர் தம்பிகளை கொஞ்சம் நேசி".

நாட்டின் முதல் குடிமகனான திரௌபதி முர்மு, கோவிலுக்குள் செல்ல முடியவில்லை. புதிய மாற்றத்திற்காக மைக் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்” என்று பேசினார். தொடர்ந்து, “ஓட்டு போட போற பொண்ணு ஒதுங்கி நிக்காத, கண்ட கண்ட சின்னம் கண்டு கலங்கி நிக்காத: உழைக்கும் மக்கள் சின்னம் இந்த ஒலிவாங்கி சின்னம்” என்று பாட்டுப் பாடி பிரச்சாரம் செய்தார்.