’’ எதிர்காலத்தில் பாஜக ,திமுக இணையலாம் ‘’ - சீமான் பரபரப்பு கேள்வி

seeman dmk bjp
By Irumporai Dec 12, 2021 09:52 AM GMT
Report

பா.ஜ.க வை எதிர்ப்பதாக கூறிக் கொள்ளும் திமுக அரசு புதியக் கல்விக் கொள்கை, வீடு தேடி கல்வி திட்டம் என பலவற்றை தொடர்ந்து ஆதரித்து வருவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.

20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களை விடுவிக்க வேண்டும் என்றும், ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி நண்பகல் 12 மணியளவில் நாம் தமிழர் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது.

இஸ்லாமியர்கள், முக்கிய நிர்வாகிகள் உட்பட 500 பேர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசிய சீமான், ''கடந்த அதிமுக ஆட்சியில் அண்ணா பிறந்த நாளையொட்டி, சிறையில் இருப்பவர்கள் விடுதலை செய்ததில் ஒரு இஸ்லாமியர்கள் கூட இல்லை.

அதிமுக, திமுக இவர்களை தொடர்ந்து வாக்கு அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்துகின்றனர். எதிர்க்கட்சியாக இருந்தபோது குரல் கொடுத்த திமுக ஆட்சிக்கு வந்த பின் கண்டு கொள்ளவில்லை.

எனவே 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களை விடுவிக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து ராஜீவ் கொலையில் இருக்கும் 7 பேரை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை'' என்றார்.

மேலும் பேசிய அவர், ''அதேபோல் மத்திய அரசை எதிர்ப்பதாக கூறும் திமுக ஆளுநர் சந்திக்கு பிறகு புதிய கல்விக் கொள்கையில் நல்ல விஷயம் இருக்கிறது. வீடு தேடி கல்வி திட்டம் என பல விஷயம் ஆதரவு கொடுக்கிறது.

எதிர்க்காலத்தில் கூட்டணிக்கான இணைப்பு திட்டமோ என சந்தேகம் வரும் அளவிற்கு அவர்கள் செயல்பாடுகள் இருக்கிறது. இதை தான் முன்பே நான் குறிப்பிட்டேன்'' என்று கூறினார்.