தமிழகத்தில் 14 நாட்கள் முழு ஊரடங்கு, தேர்வுகள் ஒத்திவைப்பு - சீமான் கோரிக்கை

Corona Seeman Lockdown Tamil Nadu
By mohanelango Apr 16, 2021 07:19 AM GMT
Report

இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை நாள்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. கடந்த சில தினங்களாக நாள்தோறும் 2 லட்சத்திற்கும் அதிகமான பாதிப்புகள் பதிவாகி வருகின்றன.

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனை கட்டுக்குள் கொண்டு வர 14 நாட்கள் முழு ஊரடங்கு விதிக்க வேண்டும் என மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

இந்நிலையில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் அனைத்து கல்லூரி தேர்வுகளையும் ஒத்தி வைக்க வேண்டும் என சீமார் கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக தன்னுடைய அவர் ட்விட்டர் பதிவில், “கொரோனோ பெருந்தொற்றின் இரண்டாவது அலை நாடு முழுவதும் வேகமாகப் பரவிவரும் நிலையில், விரைவில் நடைபெறவுள்ள பன்னிரண்டாம் வகுப்புத் பொதுத்தேர்வுகள் குறித்து மாணவர்களும் பெற்றோர்களும் பெரும் அச்சத்திற்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனோ பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த 14 நாட்கள் முழுப் பொது முடக்கத்திற்கு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்திருப்பது கவனிக்கத்தக்கது.

எனவே நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் தேவையற்ற பதற்றத்தைத் தவிர்க்கும் பொருட்டு பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகள் மற்றும் அனைத்து கல்லூரி தேர்வுகளையும் ஒத்திவைக்க தமிழக அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும்.” என்றுள்ளார்