Thursday, Jul 17, 2025

நம்ப வைத்து கழுத்தை அறுக்கும் தி.மு.க : கொந்தளித்த சீமான்

M K Stalin DMK Seeman
By Irumporai 3 years ago
Report

நம்ப வைத்து கழுத்தை அறுப்பது போல் தி.மு.க.,வின் செயல்பாடு உள்ளது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

திமுக சொல்வதை ஏற்க முடியாது

மதுரையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை திமுக அழைத்துள்ளது.

ஆனால் பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் கூட இது போன்ற சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி, துணை ஜனாதிபதியை அழைத்ததில்லை என கூறினார்.

நம்ப வைத்து கழுத்தை அறுக்கும் தி.மு.க : கொந்தளித்த சீமான் | Seeman Critizise Dmk Govt

நம்ப வைத்து கழுத்தை அறுக்கும் தி.மு.க

ஆகவே  திமுக அரசு மத்திய பாஜக அரசை குறைகூறுவதை எற்றுக்கொள்ள முடியாது எனவும், இது நியாயமில்லை எனவும் கூறினார். இந்த நிலையில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு வழங்கிய தீர்ப்பை மற்றவருக்கு வழங்கலாம் என நீதி பதி தெரிவித்துள்ளார்.

நம்ப வைத்து கழுத்தை அறுக்கும் தி.மு.க : கொந்தளித்த சீமான் | Seeman Critizise Dmk Govt

ஆனால் ராஜிவ் கொலையாளிகள் வழக்கில் தி.மு.க., மறுபடியும் நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு போட உள்ளது இதனை பார்க்கும் போது நம்ப வைத்து கழுத்தை அறுப்பது போல் தி.மு.க.,வின் செயல்பாடு உள்ளதாக சீமான் கூறினார்.

விடுதலைப்புலிகளின் தலைவரை சந்தித்தாரா சீமான்: பகிரங்கப் படுத்திய முகில்