திமுக தான் உண்மையான சங்கி - செருப்பை கழற்றி காட்டிய சீமான்

seeman dmk mkstalin tngovernment maridoss சீமான் திமுக நாம் தமிழர் கட்சி
By Petchi Avudaiappan Dec 15, 2021 08:14 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

திமுக அரசை கடுமையாக விமர்சித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென்று தனது காலில் இருந்த செருப்பை கழட்டி காண்பித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை அம்பத்தூரில் அப்துல் ரவூப் என்கிற தமிழ் தேசிய தொண்டருக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் 26 ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்துக் கொண்ட அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சாட்டை துரைமுருகனின் கைதை எதிர்த்து குரல் கொடுக்கும் திமுக வழக்கறிஞர்கள், மாரிதாஸின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்யாதது ஏன்? என கேள்வி எழுப்பினார். 

அப்போது அப்படி என்றால் யார் சங்கிகள்? என்று கேட்டுக்கொண்டே திடீரென்று தனது காலில் இருந்த செருப்பை கழட்டி காண்பித்தார். இதனால் அங்கு சிறிது சலசலப்பு ஏற்பட்டது.

மேலும் சீமானை ஜனநாயகவாதியாக இருக்க வேண்டியதை பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு.. என்னை வெறியனாக மாற்றிவிட வேண்டாம் என்று சுற்றியிருந்த தொண்டர்களிடம் கூற ஒருகணம் அந்த இடமே அதிர்ச்சியில் உறைந்தது.