படிக்கிற கூட்டம் ஒருபுறம்; கையை கடிக்கிற கூட்டம் மறுபுறம் - தவெகவை விளாசிய சீமான்
தவெக தொண்டர்களை சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தவெக தொண்டர்கள்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "படிக்கிற கூட்டமெல்லாம் ஒரு பக்கமும், கையை கடிக்கிற கூட்டம் இன்னொரு பக்கமும் கூடுது. இதை சொன்னால் கோவித்துக்கொள்கிறார்கள். நாங்கள் அணில்கள்தானே..

பழங்களை கடித்தோம், காயை கடித்தோம் அப்போதெல்லாம் அமைதியாக இருந்துவிட்டு, கையை கடித்தவுடன் கோவித்துக்கொள்கிறீர்களே என கேட்கிறார்கள். எல்லாவற்றையும் திரை போட்டு மூடி பழக்கப்பட்டவர்கள், இப்போது நம்முடைய எழுச்சியை திரையை போட்டு மூடலாம் என்று நினைக்கிறார்கள்.
இது திரையை போட்டு மூடக்கூடிய குப்பை அல்ல. நெருப்பு புரட்சி தீ என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். வறுமை பரவலாக இருக்கிறது. இதை பயன்படுத்தி, அவர்கள் ஆட்சிக்கு வருகிறார்கள். தேர்தலில் இந்த கட்சிகள் பெறுவது எல்லாம் வெற்றியா?
சீமான் காட்டம்
நான் இந்த மக்களை முழுமையாக நம்பி களத்தில் நிற்கிறேன்! எனவே, வெற்றியோ, தோல்வியோ.. அது அவர்கள் தரும் பரிசு. எங்களை போல, தனித்து நின்று தத்துவம் பேசி வெற்றி பெற்று காட்டுங்கள் பார்ப்போம். பெரிய கட்சி என்கிறார்கள், ஆனால் மாநாட்டுக்கு காசு கொடுத்துதான் ஆட்களை கூட்டி வருகிறார்கள்.
இப்படி இருப்பவர்கள், நாங்கள் வெற்றி பெற்று விடுவோம் என்று பயப்படுகிறார்கள். எல்லாமே பெரியார்தான் காரணம் என்கிறது ஒரு கூட்டம். உண்மையில் இந்த நாட்டை திருடர்கள் நாடாக மாற்றியதற்கும், எங்கள் மொழி,
கலை, இலக்கியம், பண்பாடு, வழிபாடு, நிலம், வளம், ஆட்சி அதிகாரம் ஆகியவற்றை அழித்து சிதைத்ததற்கு காரணம் பெரியார்தான். அந்த திராவிட திருட்டு சித்தாந்தத்துக்கும், தமிழ் தேசிய கருத்துகளுக்கும் இடையே தான் இங்கே போட்டியே என தெரிவித்துள்ளார்.