திமுக ஆட்சி குறித்து விமர்சித்த சீமான் ... பதிலடி கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி

Naam tamilar kachchi V. Senthil Balaji Government of Tamil Nadu DMK Seeman
By Petchi Avudaiappan May 09, 2022 03:56 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

திமுகவின் ஓராண்டு சாதனை குறித்து நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டரில் கிண்டலாக விமர்சித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று மே 7 ஆம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. கடந்த ஓராண்டு ஆட்சிக்கு மக்கள் பலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சிகளும் திமுக ஆட்சியை விமர்சித்துள்ள நிலையில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் ட்விட்டர் வாயிலாக ஆளும் அரசு குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். 

அதில் சமீப காலமாக ஆட்சியில் நிலவும் மின்வெட்டு பிரச்சனையை குறிப்பிட்டு, ”ஏப்பா சீமான்.. இந்த ஆட்சியின் ஒரு ஆண்டு சாதனையை டிவில போடுறாங்கலாம்.. அது என்னனு பார்க்கலாம்னு பாத்தா எழவு கரண்ட் இல்லப்பா.. அது தான் பெரியம்மா திராவிட மாடல்..!” என கிண்டலாக கூறியிருந்தார். 

சீமானின் இந்த பதிவிற்கு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ட்விட்டரிலேயே பதிலடி கொடுத்துள்ளார். அவர் சீமானின் பெயரை குறிப்பிட்டு “கடும் கோடையிலும் உச்சபட்ச மின் தேவை இருந்த போதும் தமிழ்நாடு மின் வாரியம் மிகச் சிறப்பாகக் கையாண்டு வருகிறது. அண்ணன் சமீபத்தில் குடியேறி இருக்கும் கடற்கரையோர சொகுசு பங்களாவின் மின் இணைப்பு எண்ணைக் கொடுத்தால் அங்கு 'உண்மையிலேயே’ மின் வெட்டு இருந்ததா என்பதை விசாரித்துச் சொல்கிறேன்” என தெரிவித்துள்ளார். 

ட்விட்டரில் இரு அரசியல் பிரபலங்கள் கருத்து மோதலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.