நாம் தமிழர் மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இரா.தேவா மறைவுக்கு சீமான் அஞ்சலி

Seeman Naam Tamizhar
By mohanelango May 25, 2021 01:33 PM GMT
Report

நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இரா.தேவா காலமானார். அவரின் மறைவுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

அதில், “நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்ட காலம் முதலாக என்னோடு இணைந்து மண்ணுக்கும் மக்களுக்குமாக, உண்மையும் நேர்மையுமாக நின்ற என் ஆருயிர் இளவல், மாணவர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளராகக் களப்பணியாற்றிய வழக்குரைஞர் இரா.தேவா அவர்கள் உயிரிழந்த துயரச்செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.

மிகுந்த ஆர்வமுள்ள ஒரு சிறந்த களப்பணியாளன், இளவயதிலேயே நம்மை விட்டு பிரிந்து சென்றார் எனும் ஈடுசெய்யவியலாப் பேரிழப்பு தாங்கொணா வலியைத் தருகிறது.

தம்பியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நம்முடைய நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துத் துயரத்தில் பங்கெடுக்கிறேன். தம்பி தேவா அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!” என்றுள்ளார்.