ஊழல் பேர்வழி..உண்மையைச் சொன்ன ராமதாசு மீது பாய்வதா?சீமான் கேள்வி!

M K Stalin Tamil nadu Seeman Gautam Adani
By Vidhya Senthil Nov 26, 2024 11:56 AM GMT
Report

 ‘ஊழல் பேர்வழி’ கெளதம் அதானி மீது பாயாது, உண்மையைச் சொன்ன ஐயா ராமதாசு மீது பாய்வதா?என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஊழல் பேர்வழி

 தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவரும், சமூக நீதிக்காகப் பல்வேறு போராட்டங்களை செய்து வருகிற ஐயா ராமதாசு அவர்களைச் சிறுமைப்படுத்தும் வகையிலான முதல்வர் ஸ்டாலினது அலட்சியப்பேச்சு அரசியல் அநாகரீகமாகும்.முதல்வர் ஸ்டாலினின் திடீர் கோபத்திற்குக் காரணமென்ன?

seeman

அடிப்படை இல்லாது ஏதாவது கேட்டாரா ஐயா ராமதாசு? அதானி குழுமம் இலஞ்சம் கொடுத்து மாட்டிக் கொண்ட விவகாரத்தில், முதல்வர் ஸ்டாலின் வழக்கத்துக்கு மாறாகப் பதற்றமடைவதேன்? இயல்பான கேள்விக்கு இவ்வளவு சீற்றம் எதற்காக? அதானியைச் சந்தித்தீர்களா? எனும் கேள்விக்கு, ‘ஆம்! இல்லை!’ எனும் பதிலைக் கூறாது.

அவருக்கு வேறு வேலையில்லை’ எனக் கூறி வசைபாடுவது அவர் வகிக்கும் பதவிக்கு அழகுதானா? பதில் சொல்ல நேர்மையற்ற முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கேள்வி கேட்ட ஐயா ராமதாசு அவர்களை நோக்கி, ‘வேலையில்லை’ எனப் பாய்வது அரசியல் அறம்தானா? எதிர்க்கட்சியாக இருக்கும்போது எண்ணற்ற அறிக்கைகளை விடுத்தாரே ஐயா

தரக்குறைவான முறையில் முதல்வர் ஸ்டாலின் பேசியிருக்கிறார் - கொந்தளித்த அண்ணாமலை!

தரக்குறைவான முறையில் முதல்வர் ஸ்டாலின் பேசியிருக்கிறார் - கொந்தளித்த அண்ணாமலை!

ஸ்டாலின், அப்போது வேலையில்லாதுதான் அறிக்கைகளை விடுத்தாரா? “எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யாமல், அவியலா செய்யும்” எனக் கேட்டாரே, அப்போது வேலையில்லாதுதான் அரசியல் செய்தாரா? “அதானி குழுமத்தோடு ஒப்பந்தம் ஏதும் கடந்த மூன்று ஆண்டுகளில் போடவில்லை” என விளக்கம் கொடுக்கிறார்  அமைச்சர் செந்தில் பாலாஜி.

திமுக கருத்தென்ன?

அதானி குழுமத்தோடு ஒப்பந்தம் போட்டதாக யாருமே கூறவில்லையே! இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்தி மையத்திடமிருந்து 1000 மெகா வாட் மின்சாரம் வாங்க தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் போட்டதே, அதானி குழுமம் இலஞ்சம் கொடுத்துதான் என்பதுதானே குற்றச்சாட்டு. அதற்கு திமுக அரசின் கருத்தென்ன?

gautam adani

இவ்விவகாரத்தில், பிரதமர் நரேந்திரமோடியின் மௌனத்துக்கானக் காரணத்தை நாடும், ஏடும் அறியும். மோடியின் அரசியலை எதிர்ப்பதாகக் கோரும் முதல்வர் ஸ்டாலினும் இச்சிக்கலில் அமைதி காப்பதேன்? பாசிசத்தை எதிர்ப்பதாகக் கூறி, நாளும் வாய்ப்பந்தல் போடும் முதல்வர் ஸ்டாலின் இப்போது மட்டும் அடக்கி வாசிப்பதேன்? ‘ஊழல் பேர்வழி’

கெளதம் அதானி மீது பாய வேண்டிய முதல்வர் ஸ்டாலின், உண்மையைச் சொன்ன ஐயா ராமதாசு மீது பாய்வதன் அரசியலென்ன? அதானியுடன் பாஜக அரசு நேரிடையான உறவில் இருக்கிறதென்றால், திமுக அரசு கள்ள உறவில் இருக்கிறதென்பதைத்தானே இச்சம்பவம் எடுத்துக் காட்டுவதாக சீமான் தெரிவித்துள்ளார்.