படமோ, பதவியோ வாரிசு என்றாலே பிரச்சினைதான் - சீமான் ஆவேசம்!

Seeman Puducherry
By Sumathi Dec 26, 2022 10:50 AM GMT
Report

 வாரிசு என்றாலே படமாக இருந்தாலும் பதவியாக இருந்தாலும் பிரச்சனை தான் என சீமான் தெரிவித்துள்ளார்.

சீமான்

புதுச்சேரியில் நடந்த மருத்துவமனை ஒன்றின் திறப்பு விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என முதலில் வலியுறுத்தியது நாம் தமிழர் கட்சிதான்.

படமோ, பதவியோ வாரிசு என்றாலே பிரச்சினைதான் - சீமான் ஆவேசம்! | Seeman Comment About Varisu At Puducherry

அதிமுகவில் யாரையும் கட்டுப்படுத்த முடியாததால் ஒருவருக்கொருவர் பேசுகின்றனர். இதற்கு வலுவான தலைமை இல்லாததுதான் காரணம். “பாஜக ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகள் ஆகப்போகிறது. நாட்டிற்கு அவர்கள் செய்த ஒரு நல்லதைச் சொல்லுங்கள்.

வாரிசு பிரச்சனைதான்..

அதானி இரண்டரை லட்சம் கடன் வாங்கியவர். அவரை உலகின் இரண்டாவது பணக்காரர் என்றால் கோபம் தான் வரும். இதைத் தவிர என்ன செய்தீர்கள். கமல்ஹாசன் 65 வருடங்கள் நடித்துள்ளார். அவர் உலகப் புகழ் பெற்ற திரைக்கலைஞன். நான் அவரது திரைப்படங்களைப் பார்த்து வளர்ந்தவன்.

அரசியலில் அவர் எடுப்பது தான் முடிவு. காங்கிரஸுடன் கூட்டணி வைத்து பாராளுமன்றத் தேர்தலைச் சந்திக்கலாம் என அவர் நினைக்கலாம். அதில் பெரிய தவறு இல்லையே. காங்கிரஸ் உடன் கூட்டணியில் திமுக உள்ளது. ஆனால் அனைத்துத் திட்டங்களுக்கும் மோடியை அழைத்து வருகிறது.

வாரிசு என்றாலே படமாக இருந்தாலும் பதவியாக இருந்தாலும் பிரச்சனைதான்” எனக் கூறியுள்ளார்.