பாஜக எங்களை விட ஒரு ஓட்டு கூடுதலாக வாங்க முடியுமா? - சீமான் சரமாரி கேள்வி
நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை கடத்துவதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வேதனை தெரிவித்துள்ளார்.
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த வேட்பாளர்களின் அறிமுக கூட்டத்திம் சிவகங்கையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது தமிழக தேர்தல் ஆணையத்தால் 3வது பெரிய கட்சியாக அறிவிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சியினை அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைக்கவில்லை, மதிக்கவில்லை. தேர்தல் நேரத்தில் எங்களது கட்சிகாரர்களை கடத்துவது ஏன்? என கேள்வியெழுப்பினார்.
பெரியார் சொன்ன சமூகநீதியை பிறர் பேசலாம் ஆனால் நாம் தமிழர் கட்சிதான் செயல்படுத்தும். சமுகநீதி என்று திமுக கூறுவது நாடகம்தான். நாடக ஆசிரியரின் மகன் ஸ்டாலின் அதனை தொடர்வதாக குற்றம் சாட்டினார். மேலும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டு நாம் தமிழர் கட்சியைவிட 1 ஓட்டு கூடுதல் வாங்க முடியுமா? என சீமான் சவால் விட்டார்.