பாக்சிங் போடலாமா? சவால் விட்ட வீரலட்சுமி கணவர் - இடம், நேரம் சொல்லுங்க சீமான் பதிலடி
வீரலக்ஷ்மியின் கணவர் சில தினங்கள் முன்பு நாம் தமிழர் சீமானை பாக்சிங்கிற்கு அழைத்த நிலையில், அதற்கு நாம் தமிழர் சீமான் பதிலடி கொடுத்துள்ளார்.
சீமான் செய்தியாளர் சந்திப்பு
சென்னை மறைமலை நகரில் இன்று செய்தியாளர்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம், வீரலட்சுமியின் கணவர் போனில் மிரட்டியதாக சொல்லப்படுவது குறித்து என கேள்வி எழுப்பப்பட்டபோது, அது பேசக் கூடாதுன்னு நீதிபதி சொல்லி இருக்காங்க என்று குறிப்பிட்டு, பாக்சிங் அது சரிதான் என தெரிவித்தார்.
அவர் பகல் நேரத்தில் பேசுனா நாம் பாக்சிங் போகலாம் ஆனால் அவர் 7 மணிக்கு மேல பேசுறாரு மேலும், நாம் எதாவது பேசி அவர் பதிவு பண்ணி இந்த மாதிரி கேள்வி வரும்னுதான் செல்போனை கட் செய்ததாக கூறிய சீமான், தங்கள் கையால் தான் சாகனும் என்று அவர் முடிவெடுத்திருந்தார் என்றால் சந்தோஷமாக எதிர்கொள்கிறேன் என்றும் இடம், நேரம் எல்லாம் கேட்டு சொல்லுங்க என சவால் விடுத்தார்.
பின்னணி என்ன..?
முன்னதாக, விஜயலக்ஷ்மி அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் தான் வீரலட்சுமி தரப்பிற்கும், சீமான் தரப்பிற்கும் பிரச்சனை ஏற்பட்டது. தொடர்ந்து இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து தனது விளக்கங்களை அளித்து வரும் நாம் தமிழர் சீமான், எப்போதும் வீரலட்சுமிக்கு தன்னிடம் இருந்து மன்னிப்பு கிடைக்காது என அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார்.
அதேபோல, வீரலட்சுமியின் கணவர் கணேசன், சீமானை வம்பிழுக்கு இழுத்ததாக ஒரு ஆடியோ சமூக வலைதளதங்களில் பரவி வருகிறது. இந்த ஆடியோ தொடர்பாக வீரலட்சுமி தரப்பில் எந்த கருத்தும் இதுவரை சொல்லப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.