என்னுடைய வாழ்க்கையும் ஆட்டோகிராப் திரைப்படம் மாதிரி தான்-சீமான்!
தன்னுடைய வாழ்விலும் ஆட்டோகிராப் திரைப்படம் போன்ற கதை உள்ளதாகச் சீமான் தெரிவித்துள்ளார்.
நடிகை விஜயலட்சுமி
நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரில் 12 வாரத்தில் விசாரணையை முடித்துக் குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்யச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து நாதககட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்குச் சம்மன் அனுப்பப்பட்டது.
அதனடிப்படையில்,வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் கடந்த சில தினங்களுக்கு முன் ஆஜரானார். அப்போது அவரிடம் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது.
அதில், தன்னுடைய வாழ்விலும் ஆட்டோகிராப் திரைப்படம் போன்ற கதை உள்ளதாகச் சீமான் தெரிவித்துள்ளார்.குறிப்பாகச் சீமான் மற்றும் விஜயலட்சுமி இடையே ஹரிநாடார் கட்ட பஞ்சாயத்து செய்ததாக விஜயலட்சுமி கூறியிருந்தது குறித்து விசாரிக்கப்பட்டது.
சீமான்
மேலும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வைத்து சீமான் தனக்கு மாலை மாற்றியதாக விஜயலட்சுமி கூறியிருந்தார்.அப்போது அந்த நிகழ்வில் உடன் இருந்தவர்கள் யார் யார் எனக் குறிப்பிட்டு அனைவரிடமும் வாக்குமூலம் பெற காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே, உயர்நீதிமன்ற தீர்ப்புக்குத் தடை விதிக்க கோரி சீமான் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பமாகும் ராகு கேது பெயர்ச்சி: இனி 1 1/2 வருடத்திற்கு இந்த ராசிகள் எச்சரிகையுடன் இருங்கள் Manithan
